×

அனல் பறக்கும் அரசியல் களம்: மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆலோசனை!

சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்தப்பட உள்ளது. முன்கூட்டியே நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அரசியல் ரீதியாக மிக முக்கியமானதாக பார்க்கப்படும் இந்த தேர்தலை எதிர்நோக்கி, பிரதான கட்சிகளான அதிமுகவும் திமுகவும் அதிரடியாக களமிறங்கியுள்ளன. தேர்தல் பிரச்சாரங்கள், கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் பணிகள் என தமிழக அரசியல் களமே அனல் பறக்கும் வேளையில், பிரதான கட்சிகள் அவ்வப்போது ஆலோசனை
 

சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்தப்பட உள்ளது. முன்கூட்டியே நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அரசியல் ரீதியாக மிக முக்கியமானதாக பார்க்கப்படும் இந்த தேர்தலை எதிர்நோக்கி, பிரதான கட்சிகளான அதிமுகவும் திமுகவும் அதிரடியாக களமிறங்கியுள்ளன. தேர்தல் பிரச்சாரங்கள், கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் பணிகள் என தமிழக அரசியல் களமே அனல் பறக்கும் வேளையில், பிரதான கட்சிகள் அவ்வப்போது ஆலோசனை கூட்டங்கள் நடத்தி தேர்தல் குறித்த ஆலோசனைகளை தொண்டர்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் வழங்கி வருகின்றன.

அந்த வகையில், தற்போது அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் தொடங்கியிருக்கிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களுடன் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். சசிகலா விடுதலை, சட்டமன்ற தேர்தல், கூட்டணி மற்றும் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு பற்றி அதில் ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.