×

துணை முதல்வர் ஓபிஎஸ் உடன் ஆதரவாளர்கள் 2ம் நாளாக ஆலோசனை!

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்த பிரச்னை நீடிக்கும் நிலையில், ஓபிஎஸ் உடன் அவரது ஆதரவாளர்கள் இரண்டாம் நாளாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற பெருங்குழப்பம் நீடிக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கைகாட்டப்பட்ட ஓபிஎஸ் போட்டியிடுவாரா? அல்லது சசிகலாவால் கைகாட்டப்பட்ட ஈபிஎஸ் போட்டியிடுவாரா என்பது குறித்து வரும் 7ம் தேதி அவர்களே இணைந்து அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இதனை பற்றி
 

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்த பிரச்னை நீடிக்கும் நிலையில், ஓபிஎஸ் உடன் அவரது ஆதரவாளர்கள் இரண்டாம் நாளாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற பெருங்குழப்பம் நீடிக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கைகாட்டப்பட்ட ஓபிஎஸ் போட்டியிடுவாரா? அல்லது சசிகலாவால் கைகாட்டப்பட்ட ஈபிஎஸ் போட்டியிடுவாரா என்பது குறித்து வரும் 7ம் தேதி அவர்களே இணைந்து அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இதனை பற்றி ஆலோசிக்க செயற்குழு கூட்டம் நடத்தப்பட்ட நிலையிலும், இந்த பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படவில்லை.

மாறாக, அக்கூட்டத்தில் ஓபிஎஸ்க்கும் ஈபிஎஸ்க்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து நேற்று முதல்வர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்து கொள்ளவில்லை. வழக்கமாக, அக்கூட்டங்களில் பங்கேற்கும் ஓபிஎஸ் நேற்று கலந்து கொள்ளாமல் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இன்று இரண்டாம் நாளாக துணை முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த வருகிறார். கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் மற்றும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஓபிஎஸ் உடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.