உதயநிதியை தொட்டால் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்த அதிகாரிகள்- “எதற்கும் தயார்” என்ற முதல்வர் விஜய்
உதயநிதியை தொட்டால் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்த அதிகாரிகள்- “எதற்கும் தயார்” என்ற முதல்வர் விஜய்உதயநிதி ஸ்டாலினை தொட்டால் போராட்டம் வெடிக்கும் என உயர் அதிகாரிகள் எச்சரித்த நிலையில், அதனை கேட்க முதல்வர் விஜய் மறுத்துவிட்டதாக தெரிகிறது.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று போலீசார் அவரை சென்னையில் இருந்து தஞ்சைக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவரை கைது செய்தால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று முதல்வர் விஜய் கவனத்திற்கு உயர் அதிகாரிகள் கொண்டு சென்றனர். ஆனால் முதல்வர் விஜய்யோ இன்று அவர் என்னை பேசுவார் நாளை என் அமைச்சரவையில் இருக்கும் பெண்களை தவறாக பேசுவார். உடனே அவரை கைது செய்யுங்கள். பின் விளைவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன். எதற்கும் தயாராகத்தான் வந்திருக்கிறேன் என்று முதல்வர் விஜய் உயர் அதிகாரிகளிடம் காட்டமாக கூறியதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.