×

சிந்தியா ஆதரவாளர்களுக்கு அனுமதி இல்லை… மத்திய பிரதேச பா.ஜ.க.வில் மெல்ல வெடிக்க தொடங்கிய சர்ச்சை

மத்திய பிரதேசத்தில் நடந்த பா.ஜ.க.வின் பயிற்சி முகாமில் ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. முன்பு காங்கிரஸ் கட்சியிலிருந்த ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அந்த கட்சியலிருந்து வெளியேறி பா.ஜ.க.வில் இணைந்தார். இதனால் அப்போது கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. மேலும் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா..ஜ.க. ஆட்சி அமைந்தது. இதற்கு கைமாறாக சிந்தியாவுக்கு மாநிலங்களவை
 

மத்திய பிரதேசத்தில் நடந்த பா.ஜ.க.வின் பயிற்சி முகாமில் ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. முன்பு காங்கிரஸ் கட்சியிலிருந்த ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அந்த கட்சியலிருந்து வெளியேறி பா.ஜ.க.வில் இணைந்தார். இதனால் அப்போது கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. மேலும் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா..ஜ.க. ஆட்சி அமைந்தது. இதற்கு கைமாறாக சிந்தியாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி மற்றும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த சிந்தியா ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவியும் பா.ஜ.க. வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஜோதிராதித்ய சிந்தியா

அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சிந்தியா ஆதரவாளர்கள் சிலர் தோல்வி கண்டாலும் வெற்றி பெற்ற எம்.எல்,ஏ.க்கள் தங்களது அமைச்சர் பதவிகளை தக்க வைத்து கொண்டனர். இதுவரை எந்தபிரச்சினையும் இல்லாமல் சென்று கொண்டு இருந்தது. இந்த சூழ்நிலையில் செஹோரே மாவட்டத்தில் பா.ஜ.க.வின் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. இந்த முகாமில் முதல் முறையாக ஜோதிராதித்ய சிந்தியா கலந்து கொண்டார். மேலும் இந்த முகாமில் அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 52 மாவட்டங்களின் கட்சி தலைவர்கள், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், மத்திய பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் முரளிதர் ராவ் மற்றும் பங்கஜ முண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பா.ஜ..க பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்கள்

ஆனால் இந்த முகாமில் ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர்களுக்கு பா.ஜ.க. அழைப்பு விடுக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரபுராம் சவுத்ரி, முன்னாள் அமைச்சர்கள் இமார்டி தேவி, துளசி சிலவாத் மற்றும் கோவிந்த் சிங் ராஜ்புத் உள்பட சிந்தியா ஆதரவாளர்கள் யார் பெயரும் அந்த நிகழ்ச்சியின் விருந்தனர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. இதனால் சிந்தியா ஆதரவாளர்கள் கொஞ்சம் அதிருப்தியில் உள்ளதாக பேசப்படுகிறது.