×

அரியர் தேர்வுகளை நடத்தத் தயார்… தமிழக அரசு தெரிவித்ததாகப் பரவும் செய்தி!

கல்லூரிகளில் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, தேர்வு நடத்தத் தயாராக உள்ளதாக ஏ.ஐ.சி.டிஇ-யிடம் தமிழக அரசு தெரிவித்துள்ளது என்று செய்தி வெளியாகி உள்ளது.தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. 10ம் வகுப்புத் தேர்வில் ஆல் பாஸ் செய்யப்பட்டது போல, கல்லூரிகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள், தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்று தமிழக
 

கல்லூரிகளில் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, தேர்வு நடத்தத் தயாராக உள்ளதாக ஏ.ஐ.சி.டிஇ-யிடம் தமிழக அரசு தெரிவித்துள்ளது என்று செய்தி வெளியாகி உள்ளது.தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. 10ம் வகுப்புத் தேர்வில் ஆல் பாஸ் செய்யப்பட்டது போல, கல்லூரிகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள், தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்தது.


இதற்கு சென்னை பல்கலைக் கழகம் ஒப்புக்கொண்ட நிலையில், அண்ணா பல்கலைக் கழகம் எதிர்ப்பு தெரிவித்தது. அகில இந்தியத் தொழில்நுட்ப கவுன்சில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக அண்ணா பல்கலைக் கழகம் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அப்படி எந்த ஒரு கடிதமும் கிடைக்கவில்லை என்று தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
இந்த நிலையில், அகில இந்தியத் தொழில்நுட்ப குழு தலைவர் அனில் சகஸ்ரபூதே தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேட்டியில், “தேர்வு எழுதாமல் எப்படி தேர்ச்சி அடைய வைக்க முடியும்? தமிழக அரசின் முடிவு தவறானது. இது பற்றி அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் அனுப்பிய கடிதத்திற்கு, நான் விரிவான பதிலை அனுப்பியுள்ளேன். அதே நேரத்தில் தமிழக அரசு எனக்கோ, நான் தமிழக அரசுக்கோ எந்த ஒரு கடிதத்தையும் அனுப்பவில்லை.
அரியர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு விசாரணையின் போது ஏஐசிடிஇ நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்” என்று கூறினார்.


இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக இந்தியத் தொழில்நுட்ப கவுன்சிலின் தலைவருடன் தமிழக உயர் கல்வித் துறை செயலாளர் பேசியதாக செய்தி வெளியாகி உள்ளது. அப்போது, தமிழக அரசு தரப்பில் அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்தத் தயாராக தமிழக அரசு தயாராக இல்லை என்று வெளியான செய்தி தவறானது. தேர்வு நடத்த அரசு தயாராகவே உள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தவர்கள் பாஸ் செய்யப்படுவார்கள் என்று வெளியான அறிவிப்பைத் தமிழக அரசு திரும்பப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தினம் தினம் வெளியாகும் புதுப்புது தகவல் மாணவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகிறது.