×

“மற்ற கட்சிகளில் ஒரு குடும்பமே அதிகாரத்தில் இருக்கும்” – திமுகவை சாடிய புதிய பாஜக தலைவர் அண்ணாமலை!

தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணையமைச்சரானார். பாஜக கட்சி விதிகளின்படி ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் கட்சிப் பதவியில் நீடிக்கக் கூடாது. அதனால் அவர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த தலைவராக துணைத் தலைவராக இருந்த அண்ணாமலையை நியமித்து டெல்லி மேலிடம் உத்தரவிட்டது. நாளை மறுநாள் சென்னையிலுள்ள கமலாயத்தில் பதவியேற்கிறார். இந்தப் பதவியேற்பு விழாவைப் பிரமாண்டமாக நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. அதற்காக கோவையிலிருந்து புறப்பட்டு, சாலை மார்க்கமாக சென்னைக்குப் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுளது. அதன்படி இன்று
 

தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணையமைச்சரானார். பாஜக கட்சி விதிகளின்படி ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் கட்சிப் பதவியில் நீடிக்கக் கூடாது. அதனால் அவர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த தலைவராக துணைத் தலைவராக இருந்த அண்ணாமலையை நியமித்து டெல்லி மேலிடம் உத்தரவிட்டது. நாளை மறுநாள் சென்னையிலுள்ள கமலாயத்தில் பதவியேற்கிறார்.

இந்தப் பதவியேற்பு விழாவைப் பிரமாண்டமாக நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. அதற்காக கோவையிலிருந்து புறப்பட்டு, சாலை மார்க்கமாக சென்னைக்குப் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுளது. அதன்படி இன்று கோவை தண்டுமாரியம்மன் கோயிலில் அண்ணாமலை வழிபாடு செய்தார். அவருக்கு மாநகர் மாவட்ட பாஜக சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “”வரும் 16ஆம் தேதி பிற்பகல் சென்னையில் பதவியேற்கிறேன்.

சென்னை செல்லும் வழியில் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்திக்க உள்ளேன். பாஜக வளர்ச்சிக்காகச் சிறப்பாகச் செயல்படுவேன். அனுபவமும், இளமையும் சேர்ந்த கூட்டு முயற்சியால், தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பாஜக வளரும். பாஜகவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பலர், தேசிய அளவில் பொறுப்பில் இருக்கின்றனர். ஒருபுறம் இளமையானவர்கள் கட்சியில் இருக்கின்றனர். மற்ற கட்சிகளில் ஒரு தலைவர், ஒரு குடும்பம் என இருப்பார்கள். ஆனால், பாஜக தனி மனிதக் கட்சி கிடையாது. இங்கு வயது முக்கியமில்லை” என்றார்.