எடப்பாடி பழனிசாமிக்கு புது சிக்கல்!
நடந்து முடிந்த மதுராந்தகம் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 2 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.
அதிமுக கோட்டை என கூறப்பட்ட இரண்டு தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் சுலபமாக வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் திமுக இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. இதில் என்ன ட்வீஸ்ட் என்றால் இரண்டு தொகுதிகளுமே அதிமுக மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. குறிப்பிட்ட சமூகம் நிறைந்த தாராபுரம் தொகுதியில் தனக்கு வெற்றி கிடைக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி எதிர் பார்த்தார். ஆனால் அவருக்கு நேர்மாறாக மக்கள் வாக்களித்து உள்ளனர். இதன் மூலம் அதிமுக தலைமை மீது மீண்டும் அக்கட்சியினருக்கு நம்பிக்கையை இழந்துள்ளனர். ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை இழந்து முதல்வர் பதவியை இழந்து தற்போது மூன்றாவது இடத்தை நோக்கி அதிமுக கரைந்து கொண்டே செல்கிறது. இது அதிமுக தலைமை மீது மக்களுக்கு இருக்கிற நம்பிக்கையின்மையை காட்டுகிறது.
இனியும் அதிமுக தலைமையில் மாற்றம் கொண்டு வராவிட்டால் அதிமுக மீண்டும்சீட்டு கட்டு போல சரியும் என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தற்போது நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு 2 சாய்ஸ் தான் உள்ளது. ஒன்று அவர் தலைமை பொறுப்பில் இருந்தால் கட்சியினர் வெளியே போவார்கள். ஒருவேளை அவர் தலைமை பொறுப்பில் இருந்து விலகினால் கட்சியை காப்பற்றலாம். எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.