×

“27% இடஒதுக்கீடு வரலாற்று சிறப்புமிக்க முடிவு… சமூக நீதிக்கு முன்னுதாரணம்” – பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 15 விழுக்காடும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 50% இடங்களும் அகில இந்திய தொகுப்புக்கு வழங்குகின்றன. தமிழ்நாட்டிலுள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப் படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீடு என்ற வகையில் கொடுக்கப்படுகிறது. ஆனால், அந்த இடங்களில் ஓரிடம் கூட பிற
 

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 15 விழுக்காடும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 50% இடங்களும் அகில இந்திய தொகுப்புக்கு வழங்குகின்றன. தமிழ்நாட்டிலுள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப் படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீடு என்ற வகையில் கொடுக்கப்படுகிறது.

ஆனால், அந்த இடங்களில் ஓரிடம் கூட பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படுவதில்லை. ஆகவே இந்த இடங்களில் 50 சதவீதத்தை ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடாக வழங்க உத்தர விடக்கோரி திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு ஆணையிட்டது.

விசாரணையில் எப்போது இடஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு கூறியிருந்தது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் பிரமாண பத்திரமும் தாக்கல் செய்திருந்தது. இச்சூழலில் ஓராண்டுக்குப் பின் தற்போது தமிழ்நாடு மட்டுமில்லாமல் நாடு முழுவதும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த இட ஒதுக்கீடு நடப்பாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, “நடப்பு கல்வியாண்டு முதல் இளங்கலை, முதுகலை மருத்துவ/ பல் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய கோட்டா பிரிவில் 27 சதவீத இட ஒதுக்கீடும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க பாஜக அரசு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு எடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு மகத்தான பேருதவியாக அமையும். அவர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்குவதுடன் நமது நாட்டில் சமூக நீதியில் ஒரு புதிய முன்னுதாரணத்தை உருவாக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.