×

ம.பி.யில் கொரோனாவால் 1 லட்சம் பேர் இறந்தாங்களா?.. நிரூபியுங்க.. நான் பதவி விலகுகிறேன்.. நரோட்டம் மிஸ்ரா சவால்

மத்திய பிரதேசத்தில் கொரோனாவால் 1 லட்சம் பேர் உயிர் இழந்தார்கள் என்று நிரூபித்தால் நான் பதவி விலகுகிறேன் என கமல் நாத்துக்கு பா.ஜ.க. அமைச்சர் சவால் விடுத்துள்ளார். மத்திய பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் கமல் நாத், கோவிட் இறப்பு தொடர்பான மாநில அரசின் அறிக்கை போலியானது, லட்சக்கணக்கான மக்கள் கோவிட்-19 ஆல் இறந்து இருப்பார்கள். என்னுடைய மதிப்பீட்டின்படி, போபால் மற்றும் இதர பகுதிகளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் இறந்து இருப்பார்கள். இந்த காலகட்டத்தில் வழங்கப்பட்ட
 

மத்திய பிரதேசத்தில் கொரோனாவால் 1 லட்சம் பேர் உயிர் இழந்தார்கள் என்று நிரூபித்தால் நான் பதவி விலகுகிறேன் என கமல் நாத்துக்கு பா.ஜ.க. அமைச்சர் சவால் விடுத்துள்ளார்.

மத்திய பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் கமல் நாத், கோவிட் இறப்பு தொடர்பான மாநில அரசின் அறிக்கை போலியானது, லட்சக்கணக்கான மக்கள் கோவிட்-19 ஆல் இறந்து இருப்பார்கள். என்னுடைய மதிப்பீட்டின்படி, போபால் மற்றும் இதர பகுதிகளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் இறந்து இருப்பார்கள். இந்த காலகட்டத்தில் வழங்கப்பட்ட இறப்பு சான்றிதழ்களின் எண்ணிக்கை மற்றம் எத்தனை இறுதி சடங்குகள் செய்யப்பட்டன என்பதை மதிப்பிடுவதன் மூலம் இறப்புகள் குறித்து சரியான கணக்கை பெற முடியும். மொத்த இறப்புகளில் 80 சதவீதத்துக்கு கொரோனா காரணமாகும். ஆனால் ஆதாரம் இல்லை என்று கூறி அவர்கள் (பா.ஜ.க. அரசாங்கம்) மறுப்பாா்கள்.

கமல் நாத்

இதை வைத்து அவர்கள் யாரை முட்டாளாக்குகிறார்கள். பொய் சொல்வதால் கோவிட் போகாது என்று தெரிவித்தார். கமல் நாத்தின் கருத்துக்கு மத்திய பிரதேச அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார். மத்திய பிரதேச உள்துறை அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான நரோட்டம் மிஸ்ரா கூறியதாவது: எதிர்க்கட்சி தலைவரின் கருத்தை கேட்டு நான் அதிர்ச்சி மற்றும் வருத்தம் அடைந்தேன். சில நாட்களுக்கு முன் இந்திய உருமாற்றமடைந்த வைரஸ் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். பின் கமல்நாத் அதை இந்திய உருமாற்றமடைந்த வைரஸ் என்கிறார். இது டூல்கிட் விவகாரத்துடன் கமல்நாத்துக்கு தொடர்பு உள்ளதை உறுதி செய்கிறது.

கொரோனாவால் இறந்தவரின் உடல் அடக்கம்

மத்திய பிரதேசத்தில் கொரோனாவால் 1 லட்சம் பேருக்கு இறந்துள்ளதாக அவர் சொல்கிறார். இந்த விவகாரத்தில் அவர் மீது கவர்னர் ஆனந்திபென் படேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறேன். அவர் நாட்டையும், மாநிலத்தை அவதூறு செய்ய முயற்சி செய்கிறார். இதற்கு (1 லட்சம் பேர் இறப்பு) காங்கிரஸ் தலைவரிடம் (கமல்நாத்) ஆதராரம் இருந்தால் எங்களிடம் தாக்க செய்ய வேண்டும் இல்லையென்றால் அவர் பதவி விலக வேண்டும். அவர் உண்மை என்று நிரூபித்து விட்டால் நான் பதவி விலகுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.