×

நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தது பாஜகவிற்குதான் பலம்: நயினார் நாகேந்திரன்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பாஜக கட்சியின் நிர்வாகி இல்ல திருமண விழாவிற்கு பாஜகவின் மாநில துணைத் தலைவர் நைனா நாகேந்திரன் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார். அதன்பின்னர் செய்தியாளர் சந்தித்த, “தலைமை சீட்டு கொடுத்தால் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன், விஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணியை அமைப்பது அவருடைய சுதந்திரம். அதுகுறித்து அவர் தான் முடிவெடுக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் ஆளுநர் கையெழுத்திடாதது எல்லாம் ஒரு விஷயமே இல்லை.
 
வரும் சட்டமன்ற தேர்தலில் தலைமை எனக்கு சீட்டு கொடுத்தால் போட்டியிடுவேன். ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அது நீதிமன்ற தீர்ப்பு எனவே அதைப்பற்றி எதுவும் கூறமுடியாது. கன்னியாகுமரி இடைத்தேர்தல் நடந்தால் பாஜகதான் போட்டியிடும். நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தது பாஜகவிற்குதான் பலம் ” என்று கூறினார்.