×

“சட்டமன்ற தேர்தலில் என்னுடைய பங்கு இருக்கும்” : மு.க.அழகிரி பரபரப்பு பேட்டி!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தன்னுடைய பங்கு இருக்கும் என மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி உயிருடன் இருக்கும் போதே அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர் மு.க.அழகிரி. கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றார். இதனால் சில ஆண்டுகளாக கட்சி பணிகளில் ஈடுபடாமல் இருந்த அழகிரி, சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் அதற்கான பணிகளில் ஆயத்தமாகியுள்ளார். அதேசமயம் அழகிரிக்கு பாஜகவிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் மௌனம் காத்து வந்தார் அழகிரி. இருப்பினும்
 

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தன்னுடைய பங்கு இருக்கும் என மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி உயிருடன் இருக்கும் போதே அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர் மு.க.அழகிரி. கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றார். இதனால் சில ஆண்டுகளாக கட்சி பணிகளில் ஈடுபடாமல் இருந்த அழகிரி, சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் அதற்கான பணிகளில் ஆயத்தமாகியுள்ளார். அதேசமயம் அழகிரிக்கு பாஜகவிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் மௌனம் காத்து வந்தார் அழகிரி. இருப்பினும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் அவர் பாஜகவில் நிச்சயம் இணைய மாட்டார். மாறாக புதிய கட்சி தொடங்கலாம் என்று கூறி வந்தனர்.

இந்நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி, என்னுடைய ஆதரவாளர்கள்., ஆலோசகர்களை கேட்டு தான் எந்த நல்ல முடிவையும் எடுப்பேன். தமிழக சட்ட பேரவை தேர்தலில் என் பங்கு இருக்கும். பாஜகவில் நான் இணைவதாக வந்த செய்தி வதந்தி தான். புதிய கட்சி தொடங்குவது குறித்து போக போக தெரியவரும்” என்றார்.