×

“இது பழிவாங்கும் நடவடிக்கையின் முதல் கட்டம்” – எம்.ஆர்.விஜயபாஸ்கர் பகிரங்க குற்றச்சாட்டு!

லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தியது அதிமுகவை திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையின் முதல் கட்டம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சரான எம்.ஆர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அந்தப் புகாரின் பேரில் அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையிட்டனர். அதில், கணக்கில் வராத 25 லட்சம் ரூபாயும் சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. விஜயபாஸ்கரின் வங்கிக் கணக்குகளையும் சோதனையிட அதிகாரிகள்
 

லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தியது அதிமுகவை திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையின் முதல் கட்டம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சரான எம்.ஆர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அந்தப் புகாரின் பேரில் அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையிட்டனர். அதில், கணக்கில் வராத 25 லட்சம் ரூபாயும் சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. விஜயபாஸ்கரின் வங்கிக் கணக்குகளையும் சோதனையிட அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் ஐ.டி ரெய்டு நடத்தப்பட்டதற்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்தது. அரசியல் காழ்புணர்ச்சியால் வருமான வரித்துறை அதிகாரிகளை திமுக அரசு ஏவி விட்டிருப்பதாகவும் அதிமுகவை பழிவாங்க நினைத்தால் அது பகல் கனவாகவே முடியும் என்றும் ஓபிஎஸ், ஈபிஎஸ் கடுமையாக சாடினர். இது குறித்து விளக்கம் அளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பழிவாங்கும் நோக்கில் ஐ.டி ரெய்டு நடத்தப்படவில்லை. மு.க ஸ்டாலின் ஆளுநரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றார்.

இந்த நிலையில், எனது வீடு உள்ளிட்டவற்றை லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தியது பழிவாங்கும் நடவடிக்கையில் முதல் கட்டம் என எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையிலும், கரூரிலும் எனக்கு சொந்த வீடு கிடையாது. கைப்பற்றப்பட்ட பணத்திற்கு கணக்கு உள்ளது. உரிய ஆவணங்களை சமர்ப்பிப்போம். எனது வங்கிக் கணக்குகள் எதுவும் முடக்கப்படவில்லை. சட்டரீதியாக இதனை எதிர்கொள்வோம். கரூரிலிருந்து அதிமுகவினருக்கு பல தொல்லைகளை தந்து திமுகவுக்கு மாற வைக்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.