×

அமைச்சர் துரைமுருகனுக்கு கனிமொழி எம்.பி வாழ்த்து!

சட்டமன்ற பொன் நாள் விழா கொண்டாடும் துரைமுருகனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து திமுக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தன் இளமைக் காலத்திலிருந்தே தலைவர் கலைஞர் அவர்களின் நிழலாகத் தொடர்ந்தவரும், தன் பேச்சால் மக்களைக் கவர்ந்தவருமான, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் அவர்களுக்கு இன்று சட்டமன்றப் பொன்விழா நாள். தமிழக முதலமைச்சர் தளபதி அவர்களின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவர் அவர். என்னைப் போன்ற பலருக்கும் வழிகாட்டியாய் திகழ்கின்றவர். கழகத்தின் முன்னேற்றத்திற்கும், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கும்
 

சட்டமன்ற பொன் நாள் விழா கொண்டாடும் துரைமுருகனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து திமுக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், தன் இளமைக் காலத்திலிருந்தே தலைவர் கலைஞர் அவர்களின் நிழலாகத் தொடர்ந்தவரும், தன் பேச்சால் மக்களைக் கவர்ந்தவருமான, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் அவர்களுக்கு இன்று சட்டமன்றப் பொன்விழா நாள். தமிழக முதலமைச்சர் தளபதி அவர்களின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவர் அவர்.

என்னைப் போன்ற பலருக்கும் வழிகாட்டியாய் திகழ்கின்றவர். கழகத்தின் முன்னேற்றத்திற்கும், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கும் எப்போதும் துணையாக நிற்கும் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்களுக்கு எனது வாழ்த்துகளும் வணக்கங்களும் என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இன்று காலை நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொன்விழா காணும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

அவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி மறைவுக்கு பிறகு எனக்கு வழிகாட்டியாக இருக்கிறார். கருணாநிதி மற்றும் க.அன்பழகன் இடத்தில் இப்போது துரைமுருகனை பார்க்கிறேன் என்று உணர்ச்சி பொங்க பேசினார். அப்போது கண் கலங்கிய துரைமுருகன், என் மீது முதல்வர் இவ்வளவு பாசம் வைத்திருப்பார் என்று நினைக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் நன்றிக் கடனுடன் இருப்பேன் என்று உருக்கமாக கூறினார். பின்னர் துரைமுருகனுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் தற்போது கனிமொழியும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.