×

பொது சேவையில் ஈடுபட்டுள்ள சாதாரண மக்கள் நாங்கள்.. மம்தாவுக்கு பதிலடி கொடுத்த மோடி

நாங்கள் பொது சேவையில் ஈடுபட்டுள்ள சாதாரண மக்கள் என்று மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார். மேற்கு வங்கம் கூச் பெஹாரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் கூறியதாவது: தற்போது நடைபெறும் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி அடையும். சகோதரி (மம்தா பானர்ஜி) நந்திகிராம் வாக்குச்சாவடியில் நீங்கள் விளையாடிய நாள், அதேநாளில் நீங்கள் தேர்தலில் தோற்றீர்கள் என்று நாடு அறிந்திருந்தது. சகோதரி மேற்கு வங்கத்தில் 80 சதவீதத்துக்கு மேல் வாக்குப்பதிவாகி
 

நாங்கள் பொது சேவையில் ஈடுபட்டுள்ள சாதாரண மக்கள் என்று மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார்.

மேற்கு வங்கம் கூச் பெஹாரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் கூறியதாவது: தற்போது நடைபெறும் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி அடையும். சகோதரி (மம்தா பானர்ஜி) நந்திகிராம் வாக்குச்சாவடியில் நீங்கள் விளையாடிய நாள், அதேநாளில் நீங்கள் தேர்தலில் தோற்றீர்கள் என்று நாடு அறிந்திருந்தது.

மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)

சகோதரி மேற்கு வங்கத்தில் 80 சதவீதத்துக்கு மேல் வாக்குப்பதிவாகி உள்ளதற்கு நீங்கள் பெருமை பட வேண்டாம். இதற்கு (அதிக வாக்குப்பதிவு) நீங்கள் தோல்வி அடைய போகிறீர்கள் என்று அர்த்தம். சகோதரி நீங்கள் தோல்வி அடைவீர்கள் என்பது உறுதி. சகோதரி இந்த தேர்தல்களில் நீங்கள் சேம் சைடு கோல் அடித்திருக்கிறீர்கள்.

திரிணாமுல் காங்கிரஸ்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கைகளில் முஸ்லிம் வாக்கு வங்கி நழுவி விட்டது. இதற்கு தேர்தலில் அந்த கட்சிக்கு வரவிருக்கும் இழப்புதான் சான்று. , தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று பா.ஜ.க. கடவுளுக்கு ஏற்கனவே தெரியுமா? என்று சகோதரி கேட்கிறார். நாங்கள் பொது சேவையில் ஈடுபட்டுள்ள சாதாரண மக்கள் என்று சகோதரியிடம் சொல்ல விரும்புகிறேன். வளர்ச்சியின் வடிவத்தில் ஆர்வத்துடன் உங்கள் அன்பை திருப்பி தருவேன் என்று மக்களிடம் சொல்ல விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.