×

கமலுக்காக களத்தில் குதித்த அக்‌ஷரா ஹாசன் ; நடனம் ஆடி வாக்கு சேகரிப்பு!!

தமிழகத்தில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக-வுக்கு மாற்றாக கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், சீமானின் நாம் தமிழர் ஆகியக் கட்சிகள் களமிறங்கியுள்ளது. தினகரனின் அமமுக கட்சி தேமுதிகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சமத்துவ மக்கள் கட்சியுடன் இணைந்துள்ளது. கடந்த நாடாளுமன்ற கட்சி வேட்பாளர்களை களமிறங்கிய கமல் ஹாசன் சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
 

தமிழகத்தில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக-வுக்கு மாற்றாக கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், சீமானின் நாம் தமிழர் ஆகியக் கட்சிகள் களமிறங்கியுள்ளது. தினகரனின் அமமுக கட்சி தேமுதிகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சமத்துவ மக்கள் கட்சியுடன் இணைந்துள்ளது.

கடந்த நாடாளுமன்ற கட்சி வேட்பாளர்களை களமிறங்கிய கமல் ஹாசன் சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் கோவையில் முகாமிட்டுள்ள கமல் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. இங்கு பாஜக சார்பில் வானதி சீனிவாசனும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரும் கமலை எதிர்த்து போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் கமலின் இளையமகள் அக்‌ஷரா ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் கமல் ஹாசனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அக்‌ஷரா ஹாசன் இன்று கோவை தெற்கு தொகுதியில் உறவினரும் நடிகையுமான சுஹாசினியுடன் இணைந்து நடனம் ஆடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

முன்னதாக கமல் ஹாசனின் பிரச்சார வாகனத்தில் கமல் ஹாசனும் பயணித்த அக்‌ஷரா ஹாசன் டார்ச் லைட்டுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலாகியது
குறிப்பிடத்தக்கது.