×

எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்? பரபரப்பு தகவல்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரையில் பெரும்பாலானோர் தாங்கள் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளில் தான் போட்டியிடுகின்றனர். அதாவது, பழனிசாமி எடப்பாடியிலும் ஓபிஎஸ் போடியிலும் ஸ்டாலின் கொளத்தூரிலும் களம் காணுகின்றனர். முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கும் நிலையில், நட்சத்திர வேட்பாளர்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில், சட்டமன்றத் தேர்தலில்
 

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரையில் பெரும்பாலானோர் தாங்கள் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளில் தான் போட்டியிடுகின்றனர். அதாவது, பழனிசாமி எடப்பாடியிலும் ஓபிஎஸ் போடியிலும் ஸ்டாலின் கொளத்தூரிலும் களம் காணுகின்றனர்.

முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கும் நிலையில், நட்சத்திர வேட்பாளர்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில், சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக களமிறங்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1967-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் போட்டியிட்டு வென்ற தொகுதியான ஆலந்தூரில், எம்.ஜி.ஆரின் வளர்ப்பு பிள்ளை என சொல்லிக் கொள்ளும் கமல்ஹாசமன் போட்டியிடப் போவதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலை கமல்ஹாசன் வெளியிடவிருக்கிறாராம். கமல்ஹாசன் உட்பட முக்கிய நிர்வாகிகள் போட்டியிடும் தொகுதிகள் நாளை தெரிய வந்துவிடும். இந்திய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளும் நாளை அறிவிக்கப்படுகிறதாம்.