×

“அரசால் உதவ முடியாவிட்டால் சீட் ஒதுக்குங்கள், கட்டணத்தை திமுக ஏற்கும்” – மு.க ஸ்டாலின் பதிவு!

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன் மூலமாக, 405 மாணவர்கள் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேரவிருக்கின்றனர். இந்த ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவர்கள், கட்டணம் செலுத்த தவித்து வருவதாக அண்மையில் தகவல் வெளியானது. இதையடுத்து மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ஏற்பதாக திமுக அறிவித்தது. அதே போல, தமிழக அரசும் அந்த அறிவிப்பை வெளியிட்டது. இருப்பினும் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்த மாணவர்கள் சிலர்,
 

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன் மூலமாக, 405 மாணவர்கள் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேரவிருக்கின்றனர். இந்த ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவர்கள், கட்டணம் செலுத்த தவித்து வருவதாக அண்மையில் தகவல் வெளியானது. இதையடுத்து மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ஏற்பதாக திமுக அறிவித்தது. அதே போல, தமிழக அரசும் அந்த அறிவிப்பை வெளியிட்டது.

இருப்பினும் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்த மாணவர்கள் சிலர், பணிக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்த நிலையில், மருத்துவ படிப்புகளில் இடம் கிடைத்தும் மாணவர்கள் அதனை தொடர முடியாத சூழல் நிலவுவதாகவும் அரசு தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் திமுக குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாமல் கேட்டரிங் பணிக்குச் செல்லும் மாணவர் யுவன்ராஜ்; திருவண்ணாமலையில் இதேபோல் தவிக்கும் 3 மாணவியர் என அவலங்கள் தொடர்கின்றன! தமிழக அரசால் உதவ முடியாவிட்டால் சீட் ஒதுக்குங்கள். கட்டணத்தை திமுக ஏற்கும்!” என குறிப்பிட்டுள்ளார்.