×

ஐடி ரெய்டு மூலம் மாநில அரசை மத்திய அரசு கட்டுக்குள் வைத்துள்ளது- மு.க.ஸ்டாலின்

திருப்பத்தூர் மாவட்டம் இராணிப்பேட்டை, அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு ஆகிய நான்கு தொகுதியிலும் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஜோலார்பேட்டையில் பிரசாரம் மேற்கொண்டார். ஜோலார்பேட்டையில் போட்டியிடும் தேவராஜி, ஆம்பூரில் போட்டியிடும் வில்வநாதன், திருப்பத்தூரில் போட்டியிடும் நல்லதம்பி, வாணியம்பாடியில் போட்டியிடும் கூட்டணிக் கட்சி வேட்பாளர் முகமது நயீம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். பிரச்சாரத்தின்போது பேசிய மு.க. ஸ்டாலின், “பாவங்கள் செய்த முதல்வர் பழனிசாமியை இயற்கையும் கடவுளும் ஏன் மக்களும் காப்பாற்ற மாட்டார்கள். தமிழகத்தில் மக்களவை தேர்தலை
 

திருப்பத்தூர் மாவட்டம் இராணிப்பேட்டை, அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு ஆகிய நான்கு தொகுதியிலும் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஜோலார்பேட்டையில் பிரசாரம் மேற்கொண்டார். ஜோலார்பேட்டையில் போட்டியிடும் தேவராஜி, ஆம்பூரில் போட்டியிடும் வில்வநாதன், திருப்பத்தூரில் போட்டியிடும் நல்லதம்பி, வாணியம்பாடியில் போட்டியிடும் கூட்டணிக் கட்சி வேட்பாளர் முகமது நயீம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பிரச்சாரத்தின்போது பேசிய மு.க. ஸ்டாலின், “பாவங்கள் செய்த முதல்வர் பழனிசாமியை இயற்கையும் கடவுளும் ஏன் மக்களும் காப்பாற்ற மாட்டார்கள். தமிழகத்தில் மக்களவை தேர்தலை போல சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக வாஷ்அவுட் ஆகிவிடும். ஓபிஎஸ் மகன் அதிமுக எம்.பி அல்ல, அவர் பாஜக எம்பியாகவே செயல்படுகிறார். பழனிசாமி அமைச்சரவையில் வேலுமணி, தங்கமணி, வீரமணி என மூன்று மணிகள் உள்ளனர். மூவரும் முற்றிலும் ஊழலில் திழைத்தவர்கள். மத்திய பாஜக அரசு, ஐடி ரெய்டு மூலம் அமைச்சர்களையும் மாநில அரசையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. பச்சை துண்டுப் போட்டுக்கொண்டால் பழனிசாமி விவசாயியா? அவர் ஒரு பச்சைத் துரோகி. எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் எடப்பாடி பழனிசாமி டெபாசிட் கூட வாங்க மாட்டார்” எனக் கூறினார்.