×

அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது ஏன்? – மு.க ஸ்டாலின்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்கட்சித்தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ” அரசு மருத்துவக் கல்லூரிகளாக செயல்பட்டுவரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கும், ஈரோடு ஐஆர்டி பெருந்துறை மருத்துவ கல்லூரிக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ளது போல கட்டணத்தை அதிமுக அரசு உயர்நிலை பேரின்னலை ஏற்படுத்தியிருக்கிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் ரூ.13, 670. பல் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம்
 

அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்கட்சித்தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ” அரசு மருத்துவக் கல்லூரிகளாக செயல்பட்டுவரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கும், ஈரோடு ஐஆர்டி பெருந்துறை மருத்துவ கல்லூரிக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ளது போல கட்டணத்தை அதிமுக அரசு உயர்நிலை பேரின்னலை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் ரூ.13, 670. பல் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் ரூ.11,610. இந்த கட்டணங்களை இந்த இரண்டு அரசு கல்லூரிகளிலும் வசூலிப்பது தானே நியாயம்? ராஜா முத்தையா அரசு மருத்துவ கல்லூரியில் ரூபாய் 5.44 லட்சம், ஈரோடு ஐஆர்டி மருத்துவ கல்லூரியில் கல்வி கட்டணம் ரூபாய் 3.85 லட்சம் உயர்த்தியுள்ளது அதிமுக அரசு. அரசு கல்லூரிகள் என்று அறிவித்துவிட்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளது போல கல்வி கட்டணம் வசூல் செய்வது ஏன்?

கட்டணம் செலுத்த 30.11.2020 என்ற இறுதி கெடு விதிக்கப்பட்டு விழிபிதுங்கி நிற்கிறார்கள் மாணவர்கள். இதுதவிர போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு வருமான வரம்பு ரூ.2 லட்சம் என்று நிர்ணயித்து இருப்பது பல மாணவர்கள் உதவித்தொகை பெற முடியாத நெருக்கடியை ஏற்படுத்தும். வருமான வரம்பை ரூ. 8 லட்சமாக உயர்த்த வேண்டும். நேற்று மாணவர்கள் என்னை சந்தித்தனர், திமுக உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்திருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.