×

முதல்வருக்கு நேரில் ஆறுதல் கூறினார் மு.க ஸ்டாலின்!

முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைந்ததையொட்டி, மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். வயது முதிர்வால் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் அண்மையில் காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநர், அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர். சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் தவுசாயம்மாளின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், 3ம் நாள் சடங்கில் அமைச்சர்கள் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இதனால் கடந்த ஒரு வாரமாக சேலத்தில்
 

முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைந்ததையொட்டி, மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

வயது முதிர்வால் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் அண்மையில் காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநர், அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர். சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் தவுசாயம்மாளின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், 3ம் நாள் சடங்கில் அமைச்சர்கள் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இதனால் கடந்த ஒரு வாரமாக சேலத்தில் இருந்த முதல்வர் நேற்று இரவு சென்னை திரும்பினார்.

இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். முதல்வர் பழனிசாமியின் தாயார் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். ஏற்கனவே போனில் ஆறுதல் கூறிய நிலையில், தற்போது நேரில் சந்திருக்கிறார் மு.க ஸ்டாலின். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் பொன்முடியும் நேரில் ஆறுதல் கூறினர்.