×

புதுச்சேரியில் திமுக தனித்து போட்டியா? ஸ்டாலின் விளக்கம்

புதுச்சேரியில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் உடன் இணைந்து செயல்படுவோம் என்றும், நமக்கு உரிய மரியாதை கிடைக்கும் வகையில் நமது செயல் திட்டம் இருக்கும் என்றும் புதுச்சேரி நிர்வாகிகள் மத்தியில் , திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் புதுச்சேரி மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் 20 க்கும் மேற்பட்டோர்
 

புதுச்சேரியில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் உடன் இணைந்து செயல்படுவோம் என்றும், நமக்கு உரிய மரியாதை கிடைக்கும் வகையில் நமது செயல் திட்டம் இருக்கும் என்றும் புதுச்சேரி நிர்வாகிகள் மத்தியில் , திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் புதுச்சேரி மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் 20 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .

கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “புதுச்சேரியில் காங்கிரஸ் உடன் இணைந்து செயல்படும் போதிலும், காங்கிரஸ் கட்சியை சார்ந்தே திமுக இருக்க வேண்டிய சூழல் உள்ளது. புதுச்சேரியில் திமுக தேய்பிறை ஆகிவிடக்கூடாது” என தெரிவித்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து கூட போட்டியிடலாம். அப்போது தான் திமுக வளர்ச்சி பெறும் என புதுச்சேரி வடக்கு பகுதி நிர்வாகிகள் சிலர் யோசனை தெரிவித்தனர். அதற்கு, பதிலளித்த ஸ்டாலின், “புதுச்சேரியில் காங்கிரஸ் உடன் இணைந்து செயல்படுவோம். நமக்கு உரிய மரியாதை கிடைக்கும் வகையில் நமது செயல் திட்டம் இருக்கும்” என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். ஆகையால் இந்த முறை ஆட்சியில் திமுகவிற்கு பங்கு இருக்கலாம் என்ற நம்பிக்கையுடன் நிர்வாகிகள் திரும்பி உள்ளனர்.