×

அதிமுக ஐடி பிரிவுக்கு சவால் விட்ட மு.க ஸ்டாலின்!

ஆரணியில் இழப்பீடு கோரிய பெண்ணுக்கு உதவித்தொகை கிடைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிரூபிக்க தயார் என அதிமுகவுக்கு மு.க ஸ்டாலின் சவால் விட்டிருக்கிறார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது, அக்கூட்டத்தில் எழிலரசி என்ற பெண் புகார் ஒன்றை முன்வைத்தார். தனது தாயார் சந்திரா சிலிண்டர் விபத்தில் இறந்து விட்டதாகவும் அதற்கு நிவாரணம் அறிவித்த அதிமுக அரசு இன்னும் அதனை வழங்கவில்லை என்றும் கூறினார். ஆனால், எழிலரசியின் குடும்பத்திற்கு
 

ஆரணியில் இழப்பீடு கோரிய பெண்ணுக்கு உதவித்தொகை கிடைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிரூபிக்க தயார் என அதிமுகவுக்கு மு.க ஸ்டாலின் சவால் விட்டிருக்கிறார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது, அக்கூட்டத்தில் எழிலரசி என்ற பெண் புகார் ஒன்றை முன்வைத்தார். தனது தாயார் சந்திரா சிலிண்டர் விபத்தில் இறந்து விட்டதாகவும் அதற்கு நிவாரணம் அறிவித்த அதிமுக அரசு இன்னும் அதனை வழங்கவில்லை என்றும் கூறினார். ஆனால், எழிலரசியின் குடும்பத்திற்கு நிவாரண தொகையாக ரூ.2 லட்சம் வழங்கியதை அதிமுகவின் ஐ.டி பிரிவு ஆதாரத்துடன் நிரூபித்தது. அரசின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்க ஸ்டாலின் எழிலரசியை தூண்டி விட்டிருப்பதாகவும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஆரணியில் இழப்பீடு கோரிய பெண்ணுக்கு உதவித்தொகை கிடைக்க திமுக நடவடிக்கை எடுத்தது. ஆனால் அதிமுக, திமுகவை குற்றம்சாட்டி தவறான தகவலை அளித்துள்ளது. பெண்ணுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை குறித்து நான் நிரூபிக்கத் தயார்; இல்லையெனில் மன்னிப்பு கேட்கிறேன். அப்படி நிரூபித்து விட்டால் நிரூபிக்கத் தவறினால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என அதிமுக ஐடி பிரிவுக்கு சவால் விட்டார்.

மேலும், ஒரு பெரியப்பாவாக இருந்து எம்ஜிஆர் என்னை நன்றாக படிக்கவும் செய்தார் என்று தெரிவித்த அவர், முதல்வர் பழனிசாமி எம்ஜிஆரை என்றாவது பக்கத்தில் சென்று பார்த்திருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பினார். அதோடு, ரயில் இன்ஜின் திருடியவனை விட்டு விட்டு கரியை திருடியவன் மீது நடவடிக்கை எடுக்கும் ஆட்சி தான் இது என்றும் விமர்சித்தார்.