×

பாஜகவுடன் கைகோர்க்கும் மு.க.அழகிரி? அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கம்!

தனது அரசியல் நிலைப்பாடு குறித்து திமுக முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஒருபுறம் திமுகவுக்கு அழுத்தம் கொடுத்து கொண்டிருக்க மறுபுறம் முக அழகிரி அரசியல் களத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளார். திமுகவிலிருந்து நீக்கப்பட்ட அவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு மீண்டும் தான் திமுகவில் சேர்த்து கொள்ளப்படலாம் என்று நினைத்திருந்த நிலையில் ஸ்டாலினால் புறக்கணிக்கப்பட்டார். திமுகவின் தலைவராக மு.க. ஸ்டாலின் கம்பீரமாக பதவி ஏற்க, மறுபுறம் அழகிரி ஆதரவாளர்கள் குமுறி கொண்டிருந்தனர். தற்போது சட்டப்பேரவை தேர்தலை
 

தனது அரசியல் நிலைப்பாடு குறித்து திமுக முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஒருபுறம் திமுகவுக்கு அழுத்தம் கொடுத்து கொண்டிருக்க மறுபுறம் முக அழகிரி அரசியல் களத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளார். திமுகவிலிருந்து நீக்கப்பட்ட அவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு மீண்டும் தான் திமுகவில் சேர்த்து கொள்ளப்படலாம் என்று நினைத்திருந்த நிலையில் ஸ்டாலினால் புறக்கணிக்கப்பட்டார். திமுகவின் தலைவராக மு.க. ஸ்டாலின் கம்பீரமாக பதவி ஏற்க, மறுபுறம் அழகிரி ஆதரவாளர்கள் குமுறி கொண்டிருந்தனர்.

தற்போது சட்டப்பேரவை தேர்தலை இலக்காக கொண்டு களமிறங்கியுள்ள அவர், மதுரையில் வரும் 20 ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். நேரடியாக அரசியலில் பங்கேற்காமல் இருக்கும் மு.க.அழகிரி அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்கும் அவர் பிறகு பல்வேறு மாவட்டங்களுக்கு மு.க. அழகிரி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்று தெரிகிறது. இதனிடையே தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு வலம் வரும் பாஜகஅழகிரிக்கு அழைப்பு விடுத்துள்ளது. அழகிரி பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம் என தமிழக பாஜக மாநில தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாஜக அழைப்பு குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள மு. க. அழகிரி, அரசியல் நிலைப்பாடு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஜனவரி அல்லது அதன் பிறகு ஆதரவாளர்களுடன் கலந்து பேசி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பேன் என்றார்.