×

‘சேர்த்துக்கிட்டா உதயம்.. இல்லன்னா அஸ்தமனம்’ – மு.க அழகிரி ஆதரவாளர்களின் அனல்பறக்கும் போஸ்டர்கள்!

மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனான மு.க.அழகிரி, திமுக தென்மண்டல அமைப்புச் செயலாளராக பொறுப்பு வகித்தார். கடந்த 2014ம் ஆண்டு திமுகவுக்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்ததாக கூறி, அவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதன் பிறகு அரசியலில் அவ்வளவாக பங்கேற்காத மு.க அழகிரி, வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது பங்கு இருக்கும் என்ற திடீர் அறிவிப்பை வெளியிட்டார். மதுரையில் இருந்து கொண்டே திமுகவுக்கு எதிராக செயல்பட்டு வந்த அவர், அண்மையில் சென்னை வந்து
 

மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனான மு.க.அழகிரி, திமுக தென்மண்டல அமைப்புச் செயலாளராக பொறுப்பு வகித்தார். கடந்த 2014ம் ஆண்டு திமுகவுக்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்ததாக கூறி, அவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதன் பிறகு அரசியலில் அவ்வளவாக பங்கேற்காத மு.க அழகிரி, வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது பங்கு இருக்கும் என்ற திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.

மதுரையில் இருந்து கொண்டே திமுகவுக்கு எதிராக செயல்பட்டு வந்த அவர், அண்மையில் சென்னை வந்து கோபாலபுரத்தில் இருந்தே திமுகவுக்கு சவால் விட்டார். அதன் பிறகு மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய அழகிரி, திமுகவுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். ஸ்டாலின் முதல்வராகவே முடியாது, எதையும் சந்திக்க தயாராக இருங்கள் என்றெல்லாம் பேசியிருந்தார். மு.க அழகிரி மீண்டும் திமுகவில் இணைய வேண்டும் என்பதே அவரது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வரும் நிலையில், இதுவரை திமுக தலைமையில் இருந்து எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை.

இத்தகைய சூழலில் மதுரையில் மு.க அழகிரிக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் ஒட்டியிருக்கும் போஸ்டர்கள் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதில், ‘அழகிரி சேர்ந்தால் உதயம் – தவிர்த்தால் அஸ்தமனம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஐபேக் தேவையில்லை அழகிரி சேர்ந்தால் போதும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.