×

அனல் பறக்கும் அரசியல் களம்: ஆதரவாளர்களுடன் மு.க அழகிரி இன்று ஆலோசனை!

புதிய கட்சி தொடங்குவது குறித்து மு.க அழகிரி இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார். மதுரை பாண்டி கோவில் அருகே இருக்கும் துவாரகா பேலஸில் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. 5,000 பேர் கலந்து கொள்ளும் வகையில் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில், 15,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் உள்ள தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருங்கால அரசியல் நடவடிக்கையை பற்றி மு.க ஸ்டாலின் முடிவெடுக்கவிருக்கிறார்.
 

புதிய கட்சி தொடங்குவது குறித்து மு.க அழகிரி இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

மதுரை பாண்டி கோவில் அருகே இருக்கும் துவாரகா பேலஸில் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. 5,000 பேர் கலந்து கொள்ளும் வகையில் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில், 15,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் உள்ள தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருங்கால அரசியல் நடவடிக்கையை பற்றி மு.க ஸ்டாலின் முடிவெடுக்கவிருக்கிறார். புதிய கட்சி தொடக்கம், பிற கட்சிகளுக்கு ஆதரவு உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி, திமுகவில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்னர் ஓரங்கட்டப்பட்டார். தென் மாவட்டங்களில் தனக்கு இருக்கும் ஆதரவை வைத்து, திமுகவை கடந்த 2 முறையாக அரியணை ஏற விடாமல் செய்ததன் முக்கிய பங்கு மு.க அழகிரிக்கு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதால், அரசியல் களம் அனல் பறக்கிறது. இத்தகைய சூழலில், மு.க அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துவது உற்று நோக்கப்படுகிறது.