×

எடப்பாடி பழனிச்சாமி குறித்து தவறான தகவல் – விசாரணைக்கு தடை விதிக்க கோரும் எஸ்.வி.சேகர்

கடந்த அதிமுக ஆட்சியின்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது அவர் குறித்து தவறான தகவல்களை அளித்ததாகவும், தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் யூடியூப் இணையதளத்தில் வீடியோ வெளியிட்டதாகவும் முன்னாள் எம்எல்ஏ எஸ். வி .சேகருக்கு எதிராக ராஜரத்தினம் என்பவர் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி. சேகருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை சென்னை எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
 

கடந்த அதிமுக ஆட்சியின்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது அவர் குறித்து தவறான தகவல்களை அளித்ததாகவும், தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் யூடியூப் இணையதளத்தில் வீடியோ வெளியிட்டதாகவும் முன்னாள் எம்எல்ஏ எஸ். வி .சேகருக்கு எதிராக ராஜரத்தினம் என்பவர் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி. சேகருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை சென்னை எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தற்போது எஸ். வி. சேகர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், தேசியக் கொடியை தான் அவமதிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்து இருக்கிறார்.