×

‘ஊழல் பட்டியலை டெல்லிக்கே கூட ஸ்டாலின் அனுப்பட்டும்’ – கடுப்பில் அதிமுக அமைச்சர்!

அதிமுக ஆட்சியில் ஊழல் நடந்து வருவதாக குற்றஞ்சாட்டி வரும் மு.க ஸ்டாலினுக்கு அமைச்சர் வேலுமணி பதிலளித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரை விறுவிறுப்படைந்துள்ளது. வழக்கம் ஒரு ஆளும் கட்சியை எதிர்க்கட்சி விமர்சிப்பதும், அதற்கு ஆளும் கட்சியினர் பதிலளிப்பதுமாகவே நாட்கள் நகர்ந்து வருகின்றன. இப்படியிருக்கும் சூழலில் பரப்புரையின் போது அமைச்சர் வேலுமணிக்கு எதிராக, ஆணித் தரமாக குற்றச்சாட்டை முன்வைத்தார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின். ஊழல் செய்வதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையே அமைச்சர் வேலுமணி மிஞ்சி விட்டதாகவும், அவர்
 

அதிமுக ஆட்சியில் ஊழல் நடந்து வருவதாக குற்றஞ்சாட்டி வரும் மு.க ஸ்டாலினுக்கு அமைச்சர் வேலுமணி பதிலளித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரை விறுவிறுப்படைந்துள்ளது. வழக்கம் ஒரு ஆளும் கட்சியை எதிர்க்கட்சி விமர்சிப்பதும், அதற்கு ஆளும் கட்சியினர் பதிலளிப்பதுமாகவே நாட்கள் நகர்ந்து வருகின்றன. இப்படியிருக்கும் சூழலில் பரப்புரையின் போது அமைச்சர் வேலுமணிக்கு எதிராக, ஆணித் தரமாக குற்றச்சாட்டை முன்வைத்தார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின்.

ஊழல் செய்வதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையே அமைச்சர் வேலுமணி மிஞ்சி விட்டதாகவும், அவர் பெயர் வேலுமணி அல்ல ஊழல் மணி என்றும் தெரிவித்திருந்தார். ஒவ்வொரு கூட்டத்தின் போதும் வேலுமணிக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருகிறார். இதற்கு அமைச்சர் வேலுமணி, குற்றச்சாட்டை நிரூபிக்கத் தயாரா? என ஸ்டாலினுக்கு சவால் விட்டிருந்தார்.

இந்த நிலையில் இது குறித்து பேசிய அமைச்சர் வேலுமணி, ‘ஊழல் பட்டியலை வேண்டுமென்றால் டெல்லிக்கே ஸ்டாலின் அனுப்பட்டும்’ என்று கூறினார். மேலும், உயர்மின் கோபுர திட்டத்தில் உரிய இழப்பீடு கிடைக்கவில்லை என விவசாயிகள் கூறியது பற்றி முதல்வருடன் பேசி முடிவு எடுக்கப்படும். பூலாம்பட்டியில் இருந்து காவிரி நீரைக் கொண்டு செல்லும் திட்டத்திற்கு ஆய்வு முடிந்தவுடன் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்’ என்று கூறினார்.