×

2ஜியால் தலைகுனிவை ஏற்படுத்திய ஆ.ராசாவுக்கு முதல்வரை விமர்சிக்கத் தகுதியில்லை! – அமைச்சர் உதயகுமார் பாய்ச்சல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்ய ஆ.ராசாவுக்குத் தகுதி இல்லை என்று வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான உணவு தயாரிக்கும் பணியை அமைச்சர் உதயகுமார் இன்று ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், “கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் பாதுகாப்பு அரண் அமைத்து, பல்வேறு நடவடிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வருகிறார். அவரது நடவடிக்கை காரணமாக தமிழ்நாட்டில் சிகிச்சை முடித்து வீடு
 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்ய ஆ.ராசாவுக்குத் தகுதி இல்லை என்று வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான உணவு தயாரிக்கும் பணியை அமைச்சர் உதயகுமார் இன்று ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், “கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் பாதுகாப்பு அரண் அமைத்து, பல்வேறு நடவடிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வருகிறார். அவரது நடவடிக்கை காரணமாக தமிழ்நாட்டில் சிகிச்சை முடித்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நோய்ப் பரவலைத் தடுக்க மக்களின் ஒத்துழைப்பும் மிகமிக முக்கியம். ஜூலை மாதம் வரை மக்களுக்குத் தேவையான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனாவை குணப்படுத்த மருந்தே இல்லை என்ற நிலையில், மக்களைக் காக்க நாங்கள் கடுமையாக போராடி வருகிறோம். மக்கள் அனைவரும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் உழைத்து வருகிறோம்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் அறிக்கை வெளியிட்டுள்ள ஆ.ராசா தன்னை அதிமேதாவியாக நினைத்துக் கொண்டிருக்கிறார். 2ஜி ஊழலில் தமிழ்நாடே தலைகுனிந்தது. முதலமைச்சரை விமர்சிக்கும் தகுதி ஆ.ராசாவுக்கு இல்லை. சாத்தான்குளம் சம்பவம் வருந்தத்தக்கது. வேதனைக்குரியது. அது போன்ற சம்பவம் இனி உலகில் வேறு எங்கும் நடக்கக் கூடாது. சாத்தான் வேதம் ஓதுவது போல ஆ.ராசா பேசுகிறார். தமிழ்நாட்டில் தி.மு.க காணாமல் போனதற்கு காரணமே ஆ.ராசாவும் 2ஜி ஊழலும்தான் காரணம்” என்றார்.