×

அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் தந்தை மரணம்…!

அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் தந்தை போஸ் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கினார். இவரது தந்தை போஸ் அமைச்சருடன் டி.கல்லுப்பட்டி அருகே டி.குன்னத்தூரில் புதிதாக கட்டப்பட்ட அம்மா கோவில் வளாகத்தில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உதயகுமாரின் தந்தை போஸுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு
 

அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் தந்தை போஸ் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 68.

தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கினார். இவரது தந்தை போஸ் அமைச்சருடன் டி.கல்லுப்பட்டி அருகே டி.குன்னத்தூரில் புதிதாக கட்டப்பட்ட அம்மா கோவில் வளாகத்தில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உதயகுமாரின் தந்தை போஸுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்போது அவரது அவரது உடல் டி.குன்னத்தூர் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று பிற்பகல் 2 மணிக்கு அம்மா கோவில் வளாகத்திலேயே அவரது உடல் அடக்கம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று முதல்வர் பழனிசாமி தலைமையிலான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்றிருந்தார்.இதனால் சென்னையில் இருந்த அவருக்கு தந்தையின் மறைவு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் உடனடியாக மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார்.