×

விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்பதை வரவேற்கிறோம்: அதிமுக

நடிகர் விஜயின் ‘விஜய் மக்கள் இயக்கம்’ அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்பதை வரவேற்கிறோம் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார் ஆவடி ஜே.பி எஸ்டேட் அருகே சரஸ்வதி நகர் பகுதியில் சுமார் 1 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இதனை தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “5 அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து பேசி நல்ல முடிவு வரும் என கூறிய நிலையில்
 

நடிகர் விஜயின் ‘விஜய் மக்கள் இயக்கம்’ அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்பதை வரவேற்கிறோம் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்

ஆவடி ஜே.பி எஸ்டேட் அருகே சரஸ்வதி நகர் பகுதியில் சுமார் 1 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இதனை தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “5 அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து பேசி நல்ல முடிவு வரும் என கூறிய நிலையில் 7.5% இடஒதுக்கீடு வழங்க அதிமுகவுடன் இணைந்து போராட திமுக தயாராக உள்ளது என கூறுவது தேவையற்ற ஒன்று. ஸ்டாலின் போராட பல்வேறு பிரச்சினைகள் உள்ளது அதற்காக போராடட்டும். விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்பதை வரவேற்கிறோம்” எனக் கூறினார்.

நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும்போது அரசியல் கட்சியாக மாறும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது,