×

அரசை குற்றஞ்சாட்டிய தமிழக பாஜக தலைவர்கள்… நச்சுனு பதில் சொன்ன அமைச்சர் மா.சு.!

சென்னையில் நடமாடும் மளிகைக் கடைகள் மூலம் வீடு தேடி வரும் பொருட்கள் சேவையை இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் தொடங்கி வைத்தனர். இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இதுவரை மத்திய அரசு சார்பில் தமிழ்நாட்டிற்கு 83 லட்சம் தடுப்பூசிகள் வந்திருக்கின்றன. இதற்காக கட்டியிருக்கும் தொகை ரூ.85 கோடியே 48 லட்சம். இதன் மூலம் நாம் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய வேண்டிய அளவு 25 லட்சம். இதில் 18
 

சென்னையில் நடமாடும் மளிகைக் கடைகள் மூலம் வீடு தேடி வரும் பொருட்கள் சேவையை இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் தொடங்கி வைத்தனர். இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இதுவரை மத்திய அரசு சார்பில் தமிழ்நாட்டிற்கு 83 லட்சம் தடுப்பூசிகள் வந்திருக்கின்றன. இதற்காக கட்டியிருக்கும் தொகை ரூ.85 கோடியே 48 லட்சம். இதன் மூலம் நாம் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய வேண்டிய அளவு 25 லட்சம்.

இதில் 18 – 45 வயதுக்குட்டப்பவர்களுக்கு இதுவரை 13 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில் இன்னமும் 12 லட்சம் தமிழகத்து வர வேண்டும். மத்திய அரசு நமக்கு அளித்துள்ள 83 லட்சமும், நாம் கொள்முதல் செய்துள்ள 13 லட்சமும் சேர்த்து 96 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதுவரை போடப்பட்டுள்ள தடுப்பூசிகளின் அளவு 87 லட்சம். தற்போது கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே உள்ளன” என்றார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் அரசு தடுப்பூசிகளை முறையாக பயன்படுத்தவில்லை என்ற பாஜகவினரின் குற்றச்சாட்டு குறித்து கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர், ”குற்றச்சாட்டுகள் வைப்பதைக் காட்டிலும் தடுப்பூசி கொள்கையில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு அரசுக்கு உறுதுணையாக இருந்தால் மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்வார்கள். குற்றம் மட்டுமே சொல்லாமல் மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகள் பெற்றுத்தர தமிழ்நாடு பாஜகவினர் முயற்சி செய்ய வேண்டும். வானதி சீனிவாசனும் எல்.முருகனும் ஒரு வாரத்திற்குள் மத்திய அரசிடமிருந்து தடுப்பூசிகளை வாங்கி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.