×

சசிகலா சென்னை வந்தபிறகு பொதுக்குழு கூட்டமா?- அமைச்சர் கடம்பூர் ராஜூ

சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 20ம் தேதி அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் பெங்களூருவில் இருந்து விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று குணமடைந்த அவர், நேற்று காலை 11 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது சசிகலா ஹப்பெல் நகரில் இருக்கும் ஒரு குடியிருப்பில் தன்னை தனிமைபடுத்திக் கொண்டிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் சென்னை ஆர்ஏ புரத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா நடிப்பில்
 

சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 20ம் தேதி அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் பெங்களூருவில் இருந்து விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று குணமடைந்த அவர், நேற்று காலை 11 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது சசிகலா ஹப்பெல் நகரில் இருக்கும் ஒரு குடியிருப்பில் தன்னை தனிமைபடுத்திக் கொண்டிருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் சென்னை ஆர்ஏ புரத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா நடிப்பில் தயாராக உள்ள கடமையை செய் திரைப்படத்தின் பட பூஜையில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, “அதிமுகவைப் பொறுத்தவரை செயற்குழு, பொதுக்குழு என இரண்டு கூட்டங்களும் நடைபெற்று முடிந்துவிட்டது. அதிமுகவின் தற்போது பொதுக்குழு கூட்டுவதற்கான அவசியம் இல்லை. டிடிவி தினகரன் வேண்டுமானால் அமமுகவில் பொதுக்குழுவைக் கூட்டி கொள்ளலாம். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த சசிகலா அதிமுக கொடி கொண்ட காரை பயன்படுத்தியது தொடர்பாக தலைமை பதிலளிக்கும்

கொரனோ காலகட்டத்தில் திரைத்துறையில் ஏற்பட்டுள்ள தொழில் சார்ந்த பிரச்சனைகளுக்கு தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. திரையரங்குகள் 100% பார்வையாளர்களுடன் செயல்படலாம் என தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்த நிலையில் மத்திய அரசும் தற்போது அதனை பின்பற்றி இருக்கிறது” எனக் கூறினார்.