×

‘ரூ.20 டோக்கனால்’.. தினகரன் ஆர்.கே.நகர் பக்கம் போக முடியாது : அமைச்சர் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக, தேமுதிக மற்றும் ஓவைசி உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. ஆர்.கே.நகர் சிட்டிங் எம்.எல்.ஏவான தினகரன், அந்த தொகுதிக்கு பதிலாக தான் கோவில்பட்டியில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார். அந்த தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிடுகிறார். இதனால், டிடிவி தினகரனுக்கும் கடம்பூர் ராஜுக்கும் இடையே கோவில்பட்டியில் நேரடி போட்டி நிலவுகிறது. கடந்த 2017ம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் சுயேட்சையாக நின்று வெற்றி
 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக, தேமுதிக மற்றும் ஓவைசி உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. ஆர்.கே.நகர் சிட்டிங் எம்.எல்.ஏவான தினகரன், அந்த தொகுதிக்கு பதிலாக தான் கோவில்பட்டியில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார். அந்த தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிடுகிறார். இதனால், டிடிவி தினகரனுக்கும் கடம்பூர் ராஜுக்கும் இடையே கோவில்பட்டியில் நேரடி போட்டி நிலவுகிறது.

கடந்த 2017ம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற தினகரன், அதற்கு பிறகு அந்த தொகுதி பக்கம் எட்டிக் கூட பார்க்கவில்லை என மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக ரூ.20 நோட்டை டோக்கனாக அவர் கொடுத்ததும் ஆதாரத்துடன் நிரூபனமானது. இவ்வாறு ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் மீது அடுக்கடுக்காக விமர்சனங்கள் எழுந்ததால், அந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடாமல் கோவில்பட்டியில் போட்டியிடுகிறார் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில், கோவில்பட்டியில் தினகரனை எதிர்த்து போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜுவும் இதை வழி மொழிந்துள்ளார். ரூ.20 டோக்கன் காரணமாக தினகரன் ஆர்.கே.நகர் தொகுதி பக்கமே போக முடியாது என அவர் விமர்சித்திருக்கிறார். மேலும், ஜெயலிதா மறைவுக்குப்பின் சட்டசபையில் திமுக ஊழல் செய்தவர்களை வீடியோக்கள் வெளியிடப்படும் என்றும் வெளியாகும் வீடியோக்களை பார்த்தால் திமுகவின் பதவி வெறியை மக்கள் புரிந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.