×

‘ஊழலின் மொத்த உருவமே திமுக தான்’ : ஸ்டாலினுக்கு அமைச்சர் பதிலடி!

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக அரசை எதிர்த்து திமுக அறிக்கை போர் நடத்தி வருகிறது. அதிமுக ஆட்சியில் ஊழல் நடப்பதாக அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறார் மு.க ஸ்டாலின். இதனை விமர்சித்த முதல்வர் பழனிசாமி, தமிழக பட்ஜெட் அளவுக்கு திமுக 2ஜி வழக்கில் ஊழல் செய்திருப்பதாகவும் மொத்த ஊழலும் திமுக ஆட்சியில் தான் நடந்ததாகவும் கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்து இன்று கொளத்தூரில் பேசிய மு.க ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் தான் ஊழல் நடக்கிறது.
 

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக அரசை எதிர்த்து திமுக அறிக்கை போர் நடத்தி வருகிறது. அதிமுக ஆட்சியில் ஊழல் நடப்பதாக அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறார் மு.க ஸ்டாலின். இதனை விமர்சித்த முதல்வர் பழனிசாமி, தமிழக பட்ஜெட் அளவுக்கு திமுக 2ஜி வழக்கில் ஊழல் செய்திருப்பதாகவும் மொத்த ஊழலும் திமுக ஆட்சியில் தான் நடந்ததாகவும் கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து இன்று கொளத்தூரில் பேசிய மு.க ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் தான் ஊழல் நடக்கிறது. அறிக்கை வெளியிடுவதாக என்னை முதல்வர் விமர்சிக்கிறார். எதிர்க்கட்சி தலைவராக எனது கடமையை தான் செய்கிறேன். முதல்வர் எனக்கு அறிக்கை நாயகன் என கொடுத்த பட்டத்தை ஏற்றுக் கொள்கிறேன். நான் அறிக்கை நாயகன் என்றால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊழல் நாயகன் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மு.க ஸ்டாலினின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக அரசு ஊழலற்ற ஆட்சி நடத்துகிறது. ஊழலின் மொத்த உருவமே திமுக தான் எனக் காட்டமாக தெரிவித்துள்ளார்.