×

“உரிய நேரத்தில் பேச்சுவார்த்தை நடக்கும்! அமைதியாக இருங்க தேமுதிக”

வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் இடையிலான மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த மெட்ரோ ரயில் நிலையத்தை பார்வையிட்ட பின் அமைச்சர் ஜெயக்குமார், ரயிலில் பயணித்தார். அதன்பின் சென்னை ராஜாஜி சாலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “பிரதமர் மோடி வருகை முழுக்க முழுக்க அரசுமுறை பயணமே. இதில் எவ்வித அரசியலும் இல்லை. எடப்பாடி பழனிசாமியும் முதல்வர் பழனிசாமியும் தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தே தனியாக சென்று பேசினர். இருவரும் கூட்டணி குறித்தும் தொகுதி
 

வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் இடையிலான மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த மெட்ரோ ரயில் நிலையத்தை பார்வையிட்ட பின் அமைச்சர் ஜெயக்குமார், ரயிலில் பயணித்தார்.

அதன்பின் சென்னை ராஜாஜி சாலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “பிரதமர் மோடி வருகை முழுக்க முழுக்க அரசுமுறை பயணமே. இதில் எவ்வித அரசியலும் இல்லை. எடப்பாடி பழனிசாமியும் முதல்வர் பழனிசாமியும் தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தே தனியாக சென்று பேசினர். இருவரும் கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் பேச வில்லை.

பிரதமரை, முதல்வர் சந்திப்பது என்பது வழக்கமான ஒன்றுதான், வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவையால் வடசென்னை மக்களின் கனவு நிறைவேறியது. அதிமுக கூட்டணியில் எந்த பிரச்னையும், குழப்பமும் இல்லை. அதிமுக கூட்டணி வலுவாகவே உள்ளது. உரிய நேரத்தில் தேமுதிகவை அழைத்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம். வட சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கியதால் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும். வரும் 2025ஆம் ஆண்டுக்குள் சென்னை போக்குவரத்து நெரிசல் இல்லாத மாநகரமாக மாற்றி அமைக்கப்படும். அதிமுகவினரை எதிரியாக நினைக்கும் டிடிவி தினகரன் திமுகவிற்கு ஆதரவாக செயல் பட்டுவருகிறார்.” எனக் கூறினார்.