×

அகமது படேல் விவகாரம்… மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு சமீபத்திய உதாரணம்.. மனிஷ் திவாரி

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளதாக்கு பகுதியில் கடந்த ஜூன் 15ம் தேதியன்று இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன வீரர்களை இந்திய வீரர்கள் தடுத்து அவர்களது முயற்சியை முறியடித்தனர். அப்போது இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், காங்கிரஸ் கல்வான் பள்ளத்தாக்கு தொடர்பாக மத்திய அரசிடம் தொடர்ந்து கேள்வி கேட்டும், சீனா இந்திய பகுதியை ஆக்கிரமித்துள்ளதாகவும்
 

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளதாக்கு பகுதியில் கடந்த ஜூன் 15ம் தேதியன்று இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன வீரர்களை இந்திய வீரர்கள் தடுத்து அவர்களது முயற்சியை முறியடித்தனர். அப்போது இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், காங்கிரஸ் கல்வான் பள்ளத்தாக்கு தொடர்பாக மத்திய அரசிடம் தொடர்ந்து கேள்வி கேட்டும், சீனா இந்திய பகுதியை ஆக்கிரமித்துள்ளதாகவும் குற்றச்சாட்டி வருகிறது.

இந்த சூழ்நிலையில், ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் வங்கிகளில் சுமார் ரூ.15 ஆயிரம் கோடி கடன் பெற்று பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, சோனியா காந்திக்கு நெருக்கமான உதவியாளரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான அகமது படேலிடம் அமலாக்கத்துறை அமலாக்கத்துறை விசாரணை செய்தது. மேலும் அகமது படேல் மகன் பைசல் படேல் மற்றும் பைசல் படேல் மருமகன் இர்பான் சித்திகி ஆகியோருடம் அமலாக்கத்துறை விசாரணை செய்யப்படுகிறார்கள். கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை மக்கள் மத்தியிலிருந்து திசை திருப்பதற்காக அமலாக்கத்துறை பயன்படுத்தி காங்கிரஸ் தலைவர்களை துன்புறுத்துவதாக அந்த கட்சி கூறிவருகிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மனிஷ் திவாரி இது தொடர்பாக டிவிட்டரில், சீனாவை குறிவைப்பதைவிட மத்தயி அரசு காங்கிரஸ் கட்சியை குறிவைக்கிறது. அகமது படேல் மீதான இடைவிடாத துன்புறுத்தல், மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு சமீபத்திய எடுத்துக்காட்டு என பதிவு செய்து இருந்தார்.