×

கெஜ்ரிவால் வீடியோ விவகாரம்.. பா.ஜ.க. மட்டுமல்ல பிரதமர் மோடியும் நம்பகத்தன்மையை இழந்து விட்டார்.. ஆம் ஆத்மி

பா.ஜ.க. மட்டுமல்ல பிரதமர் மோடியும் நம்பகத்தன்மையை இழந்து விட்டார் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மனிஷ் சிசோடியா தெரிவித்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கடுமையாக எதிர்த்து வருகிறார். மேலும் டெல்லி சட்டப்பேரவையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றினார். இந்த சூழ்நிலையில், பா.ஜ.க.வின் தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கடந்த சனிக்கிழமையன்று டிவிட்டரில், அரவிந்த் கெஜ்ரிவால் வேளாண் சட்டங்கள் தொடர்பாக பேசிய
 

பா.ஜ.க. மட்டுமல்ல பிரதமர் மோடியும் நம்பகத்தன்மையை இழந்து விட்டார் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மனிஷ் சிசோடியா தெரிவித்தார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கடுமையாக எதிர்த்து வருகிறார். மேலும் டெல்லி சட்டப்பேரவையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றினார். இந்த சூழ்நிலையில், பா.ஜ.க.வின் தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கடந்த சனிக்கிழமையன்று டிவிட்டரில், அரவிந்த் கெஜ்ரிவால் வேளாண் சட்டங்கள் தொடர்பாக பேசிய வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்ததுடன், சார் ஜி (அரவிந்த் கெஜ்ரிவால்) வேளாண் சட்டங்களின் நன்மையை சொல்கிறார் என்று பதிவு செய்து இருந்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. ஆனால் இந்த வீடியோ எடிட் செய்த வீடியோ என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், டெல்லி துணை முதல்வருமான மனிஷ் சிசோடியா கூறியதாவது: நேற்று (சனிக்கிழமையன்று) பா.ஜ.க. மற்றும் அதன் செய்தி தொடர்பாளர், வேளாண் சட்டங்களின் நன்மைகளை அரவிந்த் கெஜ்ரிவால் ஜி குறிப்பிடும் எடிட் செய்த வீடியோவை போஸ்ட் செய்து இருந்தனர்.

பிரதமர் மோடி

அது தொடர்பாக எனக்கு கோபம் மற்றும் வேளாண் சட்டங்களின் நம்பகத்தன்மை உருவாக்குவதற்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் எடிட் செய்த வீடியோவை போஸ்ட் செய்ததற்காக பா.ஜ.க.வுக்கு நான் வருத்தப்படுகிறேன். இன்று பா.ஜ.க. மட்டுமல்ல பிரதமர் நரேந்திர மோடியும் நம்பகத்தன்மை இழந்து விட்டார். பா.ஜ.க. இதனை புரிந்து கொண்டுள்ளது அதனால்தான் அரவிந்த் கெஜ்ரிவாலின் எடிட் செய்த வீடியோவை போஸ்ட் செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.