×

ஆட்சியில் பங்கு கேட்பது காங். தலைமைக்கு தெரியும் - மாணிக்கம் தாகூர்

 

ஆட்சியில் பங்கு என்பதை கடந்த 17ஆம் தேதியே தலைமையிடம் பேசி விட்டேன். செல்வப்பெருந்தகைக்கும் எனக்குமான கருத்துகள் அண்ணன் -தம்பி இடையிலானது என காங்கிரஸ் எம்பி மாணிக்கம்தாகூர் கூறியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எம்பி மாணிக்கம் தாகூர், “DNT (பிரமலைக்கள்ளர் சமுக ) கணக்கெடுப்பு குறித்து பிரதமர் மோடியிடம் கடிதம் அளிக்க உள்ளேன். சுதந்திரப் போராட்ட களத்தில் போராடி பல்வேறு உரிமைகளை இழந்த DNT மக்களுக்காக சலுகை வழங்க கோரி மனு அளிக்க உள்ளேன். காங்கிரஸ் இல்லாமல் திமுக அரசமைக்க முடியாது என நிர்மல் குமார் கூறியது அவர்களுடைய கருத்து. ஆட்சியில் பங்கு என்கிற கோரிக்கையை நாங்கள் தெரிவித்தோம். கட்சி தலைமை அதனை கேட்டுக் கொண்டது. கடந்த 17ஆம் தேதி தலைமையிடம் அமர்ந்து பேசிவிட்டு தான் வந்தோம். ராகுல் காந்தி தலைமையில் கார்கே தலைவராக ஏற்று  பலமான கட்சியாக உருவாக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை பலமாக மாற்றவும், பலமாக உருவாக்கவும் முயற்சித்து வருகிறோம். 
 
கரூர் நாடாளுமன்ற  உறுப்பினரை தவறாக பார்க்கும் சங்கிகளின்  பார்வை தொடர்கிறது. மாநிலத் தலைவராக இருக்கக் கூடிய நயினார் நாகேந்திரன் எப்படி பெண்களை பற்றி அவதூறாக பேசினார்களோ அதற்கு வருத்தப்பட்டு இருக்கிறார். பாஜக மாவட்டத் தலைவர்களுக்கு அந்த வியாதி ஒட்டியுள்ளது, அந்த வியாதியை தீர்க்க வேண்டியது முக்கியமான கடமை காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடுமையான கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். ஜோதிமணியை பொருத்தவரைக்கும் சாதாரண குடும்பத்தில் பிறந்து காங்கிரஸ் கட்சியில் உயர்ந்து எம்பியாக உள்ளார். அவரைப் பற்றி தவறான பேச்சுக்களை பேசக்கூடிய பாஜக நிர்வாகி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடி அவர்கள் இதில் தலையிட வேண்டும். பாஜக உடைய கல்சரையே மாற்றி உள்ளார். நியூ இந்தியா என்று சொல்லி பாஜக நிர்வாகிகள் பெண்களை அவதூறாகவும், அசிங்கமாகவும் பேசுவது கைவந்த கலையாகிவிட்டது. பாஜக ஆர்எஸ்எஸ் உடைய கல்ச்சர் ஆக மாறிவிட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மக்களின் நன்மைக்காக போராடுகிறோம், எங்களை பொறுத்த வரைக்கும் தமிழக முதல்வர் கூறியது போல்  தமிழ்நாடு vs டெல்லி என்பதைத்தான் போராடுகிறோம். எங்களை பொறுத்த வரைக்கும் நம்பிக்கை உள்ளது. இந்தத் தேர்தலில் தமிழகம் வெற்றி பெறும்” என்றார்.