×

பிரதமரை நம்பி அவர் சொன்னதையெல்லாம் மக்கள் செய்தார்கள்.. ஆனால் அவர்களை மோடி ஏமாற்றினார்.. கார்கே குற்ற்ச்சாட்டு

பிரதமரை நம்பி அவர் சொன்னதையெல்லாம் மக்கள் செய்தார்கள் ஆனால் அவர்களை மோடி ஏமாற்றினார் என்று மாநிலங்களவையில் மல்லிகார்ஜூன் குற்றம் சாட்டினார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பேசுகையில் கூறியதாவது: பிரதமர் மோடி மக்களிடம் பாத்திரங்களை தட்டி ஒலியெழுப்புங்கள், மெழுகுவர்த்திகளை ஏற்றுங்கள் என்று கோரிக்கை விடுத்தார். மக்களும் அவரை நம்பி அதையெல்லாம் செய்தார்கள். ஆனால் அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மாறாக அவர்களை ஏமாற்றினார். அதன் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக, அவர் சுகாதார அமைச்சரை (ஹர்ஷ்
 

பிரதமரை நம்பி அவர் சொன்னதையெல்லாம் மக்கள் செய்தார்கள் ஆனால் அவர்களை மோடி ஏமாற்றினார் என்று மாநிலங்களவையில் மல்லிகார்ஜூன் குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பேசுகையில் கூறியதாவது: பிரதமர் மோடி மக்களிடம் பாத்திரங்களை தட்டி ஒலியெழுப்புங்கள், மெழுகுவர்த்திகளை ஏற்றுங்கள் என்று கோரிக்கை விடுத்தார். மக்களும் அவரை நம்பி அதையெல்லாம் செய்தார்கள். ஆனால் அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மாறாக அவர்களை ஏமாற்றினார். அதன் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக, அவர் சுகாதார அமைச்சரை (ஹர்ஷ் வர்தன்) பலிகடாவாக்கினார் (ராஜினாமா செய்ய வைத்தார்).

மல்லிகார்ஜூன் கார்கே

அரசாங்கம் மக்களை முகக்கவசம் அணியும்படியும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும்படி கேட்டுக்கொண்டது. ஆனால் பல்வேறு மாநிலங்களில் நடந்த தேர்தல்களின்போது அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? நீங்கள் உஙகள் சொந்த விதிகளை மீறுகிறீர்கள். பணமதிப்பிழப்பு போலவே ஒரே இரவில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. அதற்கு அரசாங்கம் தயாராகவில்லை.

ஹர்ஷ் வர்தன்

மக்கள் வீடு திரும்புவதற்கு ரயில்கள் இல்லை. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அரசாங்கம் பொறுப்பு ஏற்க வேண்டும். மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட கோவிட் வீரர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். கோவிட்-19ன் இரண்டாவது அலையின்போது டெல்லியில் ஆக்சிஜன் லாங்கர் நடத்தி மற்றவர்களுக்கு உதவியவர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். ஆதரவாக வந்த பிளாஸ்மா நன்கொடையாளர்களுக்கு நான் வணக்கம் செலுத்த விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.