×

எங்களையும் கூட்டணிக்கு சேர்த்துக்கொங்க! மநீம நாடிய பிரபல கட்சி

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது இதில் திமுகவானது விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, காங்கிரஸ் இன்னும் சில கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கின்றது. அதேபோல் அதிமுக பாமக, பாஜக மற்றும் தாமக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது. கமல்ஹாசன் தலைமையிலான 3வது அணி சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகேவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில்
 

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது இதில் திமுகவானது விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, காங்கிரஸ் இன்னும் சில கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கின்றது. அதேபோல் அதிமுக பாமக, பாஜக மற்றும் தாமக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது. கமல்ஹாசன் தலைமையிலான 3வது அணி சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகேவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது.

இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம்” என தேரிவித்திருந்தார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் எஸ்டிபிஐ கட்சியின் நிஜாம், ராஜா முகமது, அபுதாகீர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். கூட்டணி தொடர்பாக எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக தொடங்கியது முதல் அக்கட்சியின் அடிப்படை வாக்கு வங்கியாக சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்களின் வாக்கு வங்கி இருந்து வருகிறது. இதனால் எஸ்டிபிஐ கட்சி திமுகவுடன் கூட்டணிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுகவிடமிருந்து எந்த அழைப்பும் இல்லாததால் மக்கள் நீதி மய்யத்திடம் தஞ்சமடைந்துள்ளனர்.