×

அவைத்தலைவர் பதவியிலிருந்து மதுசூதனனை நீக்க முடிவு?

அதிமுகவின் பொதுக் குழுக் கூட்டம் வரும் நாளை காலை 9.45 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தலைமை கழகத்தில் கழக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர். தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக அலுவலகத்தில் 3 பகுதிகளில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசியல் நிலவரம், சட்டமன்ற தேர்தல், கட்சி வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளன.
 
வயது மூப்பு, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மதுசூதனன் கடந்த சில நாட்களாகவே கட்சி பணிகளில் ஈடுபடாமல் இருக்கிறார். தோள் பட்டையில் அடிபட்டி சிகிச்சை பெற்று வருவதால் அவரால் தொடர்ந்து அதிமுக அவைத்தலைவராக செயல்பட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனால் புதிய அவைத்தலைவரை நியமிக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதன்படி புதிய அவைத்தலைவராக பண்ருட்டி ராமச்சந்திரன் அல்லது பொன்னையனை நியமிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. இதற்காகவே இரண்டு நாட்களுக்கு முன் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், பண்ரூட்டி ராமசந்திரனை சந்தித்தார். தொடர்ந்து நேற்று இரவு மதுசூதனனை ரகசியமாக சந்தித்து பேசினார். ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது மதுசூதனன் அவருக்கு ஆதரவாக இருந்தவர் என்பது குறிப்பிடதக்கது.