×

மதுசூதனின் மறைவு அதிமுகவுக்கே பெரிய இழப்பு – அதிமுக நிர்வாகிகள் இரங்கல்!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன்(80) இன்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு அதிமுக நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதிமுக அவைத்தலைவரான மதுசூதனன் தனது 14 வயதில் எம்.ஜி.ஆருக்கு ரசிகர் மன்றம் தொடங்கியதன் மூலமாக அரசியலில் கால் பதித்தார். வடசென்னையில் மிகப்பெரிய அரசியல்வாதியாக திகழ்ந்த மதுசூதனன் 1991ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையில் கைத்தறித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இதையடுத்து,
 

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன்(80) இன்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு அதிமுக நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக அவைத்தலைவரான மதுசூதனன் தனது 14 வயதில் எம்.ஜி.ஆருக்கு ரசிகர் மன்றம் தொடங்கியதன் மூலமாக அரசியலில் கால் பதித்தார். வடசென்னையில் மிகப்பெரிய அரசியல்வாதியாக திகழ்ந்த மதுசூதனன் 1991ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையில் கைத்தறித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இதையடுத்து, கடந்த 2007ஆம் ஆண்டு அவர் அதிமுக அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மதுசூதனன் இருக்கும் வரை அவர் தான் அவைத்தலைவர் என ஜெயலலிதா சொல்லிவிட்டுச் சென்றார். அதன் படியே, இத்தனை ஆண்டுகளாக அந்த பதவியில் இருந்து வந்த மதுசூதனன் இன்று அதிமுகவின் அவைத்தலைவராகவே உயிர் நீத்தார். அவரது மறைவு அதிமுகவினரை கலங்க வைத்துள்ளது.

மதுசூதனின் மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர். அண்ணன் மதுசூதனின் மறைவு அதிமுகவிற்கு பெரிய இழப்பு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தொண்டனுக்கு ஒரு பிரச்சினை என்றால் தோளோடு தோள் நின்றவர் மதுசூதனன் என சைதை துரைசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.