×

“ஒரே நாளில் மோதும் கமல், சீமான், உதயநிதி, தினகரன்” அனல் பறக்கும் அரசியல் களம்!

திமுக , அமமுக, மக்கள் நீதி மய்யம் என பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். தமிழகம் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சனி, ஞாயிறு, தவிர மார்ச் 19ம் தேதி வரை தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 20-ஆம் தேதி வேட்பு மனுக்கள்
 

திமுக , அமமுக, மக்கள் நீதி மய்யம் என பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

தமிழகம் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சனி, ஞாயிறு, தவிர மார்ச் 19ம் தேதி வரை தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 20-ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்றும் வேட்புமனு திரும்பப் பெற மார்ச் 22ஆம் தேதி கடைசிநாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அன்று மாலையே தமிழகம், புதுச்சேரி காண இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளருடன் 5 பேருக்கு பதிலாக வேட்பாளருடன் சேர்த்து 3 பேர் மட்டுமே வர தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.வேட்புமனு தாக்கலுக்கு ஆனால் 5க்கு பதில் இரண்டு வாகனங்களை மட்டுமே பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை தெற்கில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் இன்று மதியம் 1.30 மணிக்கு வேட்புமனுத்தாக்கல் செய்கிறார். அதேபோல் திருவொற்றியூரில் போட்டியிடும் சீமான் இன்று மதியம் 12 மணிக்கு வேட்புமனுவை தாக்கல் செய்கிறார் . கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச் செயலாளர் தினகரனும் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்கிறார். ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார் இன்று பிற்பகல் 1. 45 மணிக்கு வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ள நிலையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று மதியம் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார்.