×

‘ரஜினியின் ஆதரவு பாஜகவுக்கு தான்’ : எல்.முருகன் கருத்து!

தேர்தலில் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு பாஜகவுக்கு தான் கிடைக்கும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். அரசியலுக்கு வரப் போவதாக பல ஆண்டுகளாக கூறி வந்த நடிகர் ரஜினிகாந்த், உடல்நிலையை காரணம் காட்டி அதற்கு முட்டுக் கட்டை போட்டுவிட்டார். அரசியலுக்கு வரவில்லை என்றாலும், தேர்தலில் என்னால் முடிந்ததை செய்வேன் என்று அவர் தெரிவித்தது, அரசியல் ரீதியாக உற்று நோக்கப்படுகிறது. அதாவது, பாஜக கொடுத்த அழுத்தத்தால் ரஜினி கட்சி தொடங்கவிருந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது அரசியல் பயணம்
 

தேர்தலில் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு பாஜகவுக்கு தான் கிடைக்கும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

அரசியலுக்கு வரப் போவதாக பல ஆண்டுகளாக கூறி வந்த நடிகர் ரஜினிகாந்த், உடல்நிலையை காரணம் காட்டி அதற்கு முட்டுக் கட்டை போட்டுவிட்டார். அரசியலுக்கு வரவில்லை என்றாலும், தேர்தலில் என்னால் முடிந்ததை செய்வேன் என்று அவர் தெரிவித்தது, அரசியல் ரீதியாக உற்று நோக்கப்படுகிறது. அதாவது, பாஜக கொடுத்த அழுத்தத்தால் ரஜினி கட்சி தொடங்கவிருந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது அரசியல் பயணம் தடைபட்டதால் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கக்கூடும் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

ஆனால், ரஜினி யாருக்கும் வாய்ஸ் கொடுக்க மாட்டார் என தமிழருவி மணியன் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். இதனிடையே ரஜினியின் ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரஜினி ரசிகர்கள் மன்றத்தின் உத்தரவை மீறி, நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேர்தலில் ஆதரவு கேட்டு அழுத்தம் ஒரு பக்கம், ரசிகர்களின் போராட்டம் மறு பக்கம் என இக்கட்டான சூழலில் சிக்கித் தவிக்கிறார் ரஜினிகாந்த்.

இந்த நிலையில், ரஜினியின் ஆதரவு பாஜகவுக்கு தான் கிடைக்கும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ரஜினி ஆன்மீகத்தை நம்புகிறவர் என்பதால் அவரின் ஆதரவு பாஜகவிற்கு கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் இருக்கிறதா என்பதே தெரியவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.