×

“பிரதமர் யார் கையை உயர்த்தினாலும் வெற்றி” – எல். முருகன்

பிரதமர் மோடி யார் கையை உயர்த்தினாலும் வெற்றிதான் என பாஜக மாநில தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “சென்னை வந்த பிரதமருக்கு அதிமுக- பாஜக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மீண்டும் வரும் 25 ஆம் தேதி பிரதமர் மோடி கோவை வருகிறார். இதற்கு முன்னதாக 21 ஆம் தேதி ராஜ்நாத் சிங் வருகிறார். பாஜகவின் பிரச்சாரம் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும். திமுகவால் நடத்தப்படும் மக்கள் குறை தீர்ப்பு
 

பிரதமர் மோடி யார் கையை உயர்த்தினாலும் வெற்றிதான் என பாஜக மாநில தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “சென்னை வந்த பிரதமருக்கு அதிமுக- பாஜக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மீண்டும் வரும் 25 ஆம் தேதி பிரதமர் மோடி கோவை வருகிறார். இதற்கு முன்னதாக 21 ஆம் தேதி ராஜ்நாத் சிங் வருகிறார். பாஜகவின் பிரச்சாரம் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.

திமுகவால் நடத்தப்படும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டங்கள் தேர்தலுக்கான கண் துடைப்பு நாடகம். மக்களை ஏமாற்றுவதற்கு போடுகின்றன நாடகம். திமுக தொகுதி எம்.எல்.ஏ, எம்.பி யார் என்றே மக்களுக்கு தெரியாது. ஏனெனில் அவர்கள் தொகுதி பக்கமே வருவது கிடையாது. திமுக தலைவர் எந்த காலத்திலும் முதல்வராக முடியாது. அவரது முதல்வர் கனவு கனவாகவே இருக்கும். திமுக ஆட்சிக்கு வந்தால் விலை வாசி உயரும், ரவுடிசம் தலைதூக்கும். நிச்சயமாக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிப்பெறாது.

அதிமுகவுடனான பாஜக கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும், தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணி நிச்சயம் வெற்றிப்பெறும். சமையல் எரிவாயு, பெட்ரோல் டீசல் விலை நிச்சயம் குறையும். ராகுல்காந்தி ஸ்டாலின் குறித்து எந்த பிரச்சாரத்திலும் பேசவில்லை. அவர் செல்லும் இடமெல்லாம் தோல்விதான் ஏற்பட்டுள்ளது” எனக் கூறினார்.