×

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஜார்ஜ் கோட்டையில் காவிக்கொடி பறக்கும் – பாஜக தலைவர் முருகன்

மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த வாரம் முழுவதும் சேவை வாரமாக அறிவித்து அதனை கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன் பயணம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாகவிழுப்புரம் மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விவசாயிகளுக்கு வழங்கப்படும் கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட போலியான நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வருகிற 2021
 

மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த வாரம் முழுவதும் சேவை வாரமாக அறிவித்து அதனை கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன் பயணம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “விவசாயிகளுக்கு வழங்கப்படும் கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட போலியான நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வருகிற 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரை அதிமுகவுடனான கூட்டணி தொடரும். நடிகர் ரஜினி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டால், அதற்குள் ஆன்மீக அரசியல் ஆரம்பித்தால் வரவேற்கிறோம். ரஜினி கட்சி ஆரம்பித்த பின்னர் அவரிடம் கூட்டணி குறித்து பேசுவோம்.

திமுக எந்த திட்டம் கொண்டு வந்தாலும் எதிர்க்கும் நோக்கத்தில் உள்ளது. அதனால் தான் அவர்கள் எல்லா திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் பாஜக தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றிபெறும். மத்திய அரசின் திட்டங்களை அதிகளவில் பயன்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஜார்ஜ் கோட்டையில் காவிக்கொடி பறக்கும்” எனக் கூறினார்.