×

“யாரிடமும் ஆதரவு கேட்கும் நிலையில் பாஜக இல்லை” – குஷ்பு

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் அரசான அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் பாஜக சட்டமன்றத்திற்குள் நுழைய திட்டம் தீட்டியுள்ளது. தேர்தலில் அதிமுகவிடம் பாஜக 40 தொகுதிகளை கேட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் தமிழகம் வரவிருந்த நிலையில், அவரது பயணம் தடைபட்டது. இதனிடையே, அதிமுக மற்றும் பாஜக இடையே மோதல் போக்கு தொடங்கியது. முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை தான் முடிவெடுக்கும் என்று
 

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் அரசான அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் பாஜக சட்டமன்றத்திற்குள் நுழைய திட்டம் தீட்டியுள்ளது. தேர்தலில் அதிமுகவிடம் பாஜக 40 தொகுதிகளை கேட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் தமிழகம் வரவிருந்த நிலையில், அவரது பயணம் தடைபட்டது.

இதனிடையே, அதிமுக மற்றும் பாஜக இடையே மோதல் போக்கு தொடங்கியது. முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை தான் முடிவெடுக்கும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறியது அதிமுகவினர் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியது. எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்கள் தான் கூட்டணியில் இருக்க முடியும் என அதிமுகவினர் பாஜகவுக்கு எதிராக பேசி வந்தனர்.

இது ஒருபுறமிருக்க தமிழகம் வரவிருந்த அமித்ஷா, நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து தேர்தலில் ஆதரவு கேட்கப் போவதாகவும் தகவல்கள் கசிந்தது. அதற்கு ரஜினி ஒப்புக் கொள்வாரா? மாட்டாரா? என பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் தான் அவரது பயணம் தடைபட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் குஷ்பு, ‘யாரிடமும் ஆதரவு கேட்கும் நிலையில் பாஜக இல்லை என்று கூறினார். மேலும், மு.க ஸ்டாலின் போட்டியிடும் அதே தொகுதியில் தானும் போட்டியிட தயார் என்றும் தெரிவித்தார்.