×

உதயநிதியுடன் மோதும் குஷ்பு! இந்த தொகுதியில் போட்டி?

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை குஷ்புவுக்கு கட்சியில் இன்னும் பொறுப்பு வழங்கப்படவில்லை என்றாலும், 2021 சட்டமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு அவருக்கு சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளராக நியமித்தது பாஜக. வரும் சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் குஷ்பு போட்டியிடவும் வாய்ப்பிருப்பதாகவே தகவல். இந்நிலையில், நேற்று சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதி தேர்தல் தொடர்பாக அத்தொகுதியின் நிர்வாகிகளுடன் குஷ்பு மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம்
 

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை குஷ்புவுக்கு கட்சியில் இன்னும் பொறுப்பு வழங்கப்படவில்லை என்றாலும், 2021 சட்டமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு அவருக்கு சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளராக நியமித்தது பாஜக. வரும் சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் குஷ்பு போட்டியிடவும் வாய்ப்பிருப்பதாகவே தகவல்.

இந்நிலையில், நேற்று சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதி தேர்தல் தொடர்பாக அத்தொகுதியின் நிர்வாகிகளுடன் குஷ்பு மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் நிச்சயம் தாமரை மலர்ந்தே தீரும். சகோதரி குஷ்புக்கு வாக்களிக்க தயாரா? மோடி ஆட்சியின் போதுதான் தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்கள் வந்து உள்ளது. ஆனால் பாஜகவில் இருந்து ஒரு எம்.பி, எம்எல்ஏ கூட தமிழகத்தில் இல்லாததது வருத்தமளிக்கிறது” எனக் கூறினார்.

திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி பல முறை போட்டியிட்ட சேப்பாக்கம் தொகுதி திமுகவின் கோட்டையாகும். அங்கு திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலினை களமிறக்க திமுக திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில் அவருக்கு போட்டியாக குஷ்புவை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளது.