×

“முன்னாள் பிரதமர் என்றும் பாராமல்… மன்மோகன் சிங்கை அவமதித்த அமைச்சர்”

நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவலின் தீவிரம் பயங்கரமாய் இருக்கிறது. ஆக்சிஜன் இல்லாமை, தடுப்பூசி மற்றும் படுக்கை வசதி பற்றாக்குறை என பல்வேறு மாநிலங்கள் அல்லல்பட்டு வருகின்றன. இச்சூழலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனாவைக் கட்டுப்படுத்த சில ஆலோசனைகளைக் கூறி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார். அவரின் ஆலோசனைகளை அனைவரும் வரவேற்றனர். இதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பதில் கடிதம் எழுதினார். ஆனால் அது பதிலடி கடிதமாகத் தான் இருந்தது. காங்கிரஸ்
 

நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவலின் தீவிரம் பயங்கரமாய் இருக்கிறது. ஆக்சிஜன் இல்லாமை, தடுப்பூசி மற்றும் படுக்கை வசதி பற்றாக்குறை என பல்வேறு மாநிலங்கள் அல்லல்பட்டு வருகின்றன. இச்சூழலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனாவைக் கட்டுப்படுத்த சில ஆலோசனைகளைக் கூறி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார். அவரின் ஆலோசனைகளை அனைவரும் வரவேற்றனர்.

இதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பதில் கடிதம் எழுதினார். ஆனால் அது பதிலடி கடிதமாகத் தான் இருந்தது. காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்தும் காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்களை விமர்சித்தும் எழுதியிருந்தார். இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உலகத் தலைவர்களிடையே நன்மதிப்பைப் பெற்ற டாக்டர் மன்மோகன் சிங் சமீபத்தில் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் ஐந்து அம்ச ஆலோசனைகளை வழங்கியிருந்தார். தடுப்பூசி தட்டுப்பாடின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தார். இக்கோரிக்கை உள்ளிட்ட சிலவற்றை மத்திய அரசு உடனே நிறைவேற்றியிருக்கிறது.

மேலும், அவர் கூறிய யோசனைகளை நிறைவேற்றுவதற்கு மத்திய பாஜக அரசு முயல வேண்டும். ஆனால், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், மன்மோகன் சிங்குக்கு எழுதிய பதில் கடிதத்தில், தரம் தாழ்ந்து மலிவான அரசியல் உள்நோக்கத்தோடு எழுதியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மன்மோகன் சிங் கூறிய யோசனையை நாட்டு மக்கள் அனைவரும் வரவேற்கிறார்கள். அதற்கு சமூக ஊடகங்களில் பதிவானவையே சாட்சிகளாக இருக்கின்றன” என்றார்.