×

பெண் எம்.பியை குண்டுக்கட்டாக கைது செய்வதா? – கே.எஸ்.அழகிரி கண்டனம்!

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி போலீசாரால் கைது செய்யப்பட்டதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கரூரில் லைட்ஹவுஸ் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டிருந்த திடீரென காந்தி சிலை அகற்றப்பட்டது. காங்கிரஸ் சார்பில் 70 ஆண்டுகளுக்கு முன்னர் வைக்கப்பட்ட அந்த காந்தி சிலைக்கு பதிலாக, பனியன் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் புதிய காந்தி சிலை வைக்கப்பட்டது. அந்த சிலையை தொட்டால் சிமெண்ட் உதிரும் அளவுக்கு தரமற்று இருப்பதாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி புகாரளித்தார். இதை எதிர்த்து இன்று
 

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி போலீசாரால் கைது செய்யப்பட்டதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கரூரில் லைட்ஹவுஸ் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டிருந்த திடீரென காந்தி சிலை அகற்றப்பட்டது. காங்கிரஸ் சார்பில் 70 ஆண்டுகளுக்கு முன்னர் வைக்கப்பட்ட அந்த காந்தி சிலைக்கு பதிலாக, பனியன் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் புதிய காந்தி சிலை வைக்கப்பட்டது. அந்த சிலையை தொட்டால் சிமெண்ட் உதிரும் அளவுக்கு தரமற்று இருப்பதாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி புகாரளித்தார்.

இதை எதிர்த்து இன்று கரூரில் காங்கிரஸ் கட்சியினருடன் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி ஜோதிமணியை, போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜோதிமணி, இந்த அரசின் அடக்குமுறைக்கும் அராஜகத்திற்கு அஞ்சமாட்டோம்.. பழனிசாமி அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன என காட்டமாக தெரிவித்தார். இந்த நிலையில், எம்.பி ஜோதிமணி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், எம்.பி ஜோதிமணியை குண்டுக்கட்டாக பலவந்தமாக காவல்துறை கைது செய்தது கண்டனத்திற்கு உரியது. தமிழக ஆட்சியாளர்கள் அடக்குமுறையை ஏவிவிடுவது போலிருக்கிறது. காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொண்ட காவல்துறையினரை கண்டிக்கிறேன். ஜோதிமணியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். காந்தி சிலையை தரமான முறையில் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டிருக்கிறார்.